For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Guilty Mind’s review : இயக்குநரால் சீரழிந்த நடிகையின் வாழ்க்கை... நீதி கேட்டு வாதாடும் பெண் !

  |

  சென்னை : இயக்குனர் ஷெபாலி பூஷன் இயக்கத்தில் அமேசான் பிரைமில் வெளியாகி இருக்கும் வெப்தொடர் தான் 'Guilty Mind'

  பத்து எபிசோடுகள் கொண்ட இந்த வெப்தொடரில் ஒவ்வொரு எபிசோடிலும், ஒவ்வொரு வித்தியாசமான வழக்குகளுக்கு தீர்வு காணப்படுகின்றன.

  ஷ்ரியா பில்கோன்கர், வருண் மித்ரா, நம்ரதா ஷெத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

  விஜய், அஜித்தை தொடரும் சிவகார்த்திகேயன்... சிறப்பான வளர்ச்சியில் டான்! விஜய், அஜித்தை தொடரும் சிவகார்த்திகேயன்... சிறப்பான வளர்ச்சியில் டான்!

  Guilty Mind's

  Guilty Mind's

  நீதிமன்றத்தையும் , நீதிமன்றத்தின் செல்பாடுகளையும் காட்சிக்கு காட்சி அழகாக காட்டி உள்ளது இந்த "Guilty Mind's". இந்தி மற்றும் ஆங்கிலம் என இருமொழிகளில் இருக்கும் இந்த தொடரில், Mine of Yours, Finisher, Water, Sperma, Aalaap, ENHO, Deep Waters, Plan your Baby, Alola, Guilty என்ற பத்து எபிசோடுகள் உள்ளன. பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் என பல திகிலூட்டும் கதைகள் இதில் இடம் பெற்றுள்ளன.

  கதைக்குள் காதல்

  கதைக்குள் காதல்

  சஸ்பென்ஸ் திகில் கதைக்கு ஏற்றால் போல, பின்னணி இசை, ஸ்க்ரீன் பிளே என அனைத்தும் தரமாக உள்ளது. தீபக் ராணா மற்றும் கஷாஃப் குவாஸ் கதாபாத்திரத்தில் வருண் மித்ரா மற்றும் ஷ்ரியா பில்கோன்கர் ஆகியோர் வழக்கறிஞர்களாக இந்த சிரீஸ் முழுவதும் நடித்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் காதல், ரொமான்ஸ் என கதைக்குள் காதலை நுழைத்து அழகுப்படுத்தி உள்ளார் இயக்குநர்.

  போராடும் பெண்ணின் கதை

  போராடும் பெண்ணின் கதை

  Guilty Mind's தொடரின் முதல் பாகமான Mine of Yours என்ற கதை குறித்து விரிவாக பார்க்கலாம். சினிமா ஆசையால் தனது வாழ்க்கையை தொலைத்து மனவேதனையுடன் போராடும் ஓர் பெண்ணின் கதை. ஓரு பெண் தன் வாழ்க்கையில் கனவை அடைய சந்திக்கும் பிரச்சனைகள், அவமானங்கள், வலிகளை இந்த தொடர் வலியுடன் கூறியுள்ளது.

  பொய் வழக்கு

  பொய் வழக்கு

  தேசிய விருதுகளை பெற்ற பிரபல இயக்குநர் திவேந்து குரானா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை மாலா குமாரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார். இந்த வழக்கு விசாரணைக்கு வர, நடிகை மாலாவிற்கு ஆதரவாக கஷாஃப் வாதாடுகிறார். இயக்குநருக்கு ஆதரவாக தீபக் வாதாடுகிறார். நீதிமன்றத்தில் நடிகை மாலாவின் மீது அடுக்கடுக்கான புகார்கள் கூறப்படுகிறது. பாலாத்காரம் நடந்த கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் கழித்து இப்போது இந்த வழக்கை மாலா தொடர காரணம், புதிய படம் ஒன்றை இயக்குநர் திவேந்து குரானா இயக்க உள்ளார். இந்த படத்தில் மாலாவை ஒப்பந்தம் செய்யாததால்அவர் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  பாலியல் பலாத்காரம்

  பாலியல் பலாத்காரம்

  ஆனால், நடிகை மாலா, சிறுவயதில் இருந்தே நடிகையாக வேண்டும் என்பது எனது கனவு. பல ஆண்டு போராட்டத்திற்கு பிறகு எனக்கு திவேந்து குரானா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து. எனது முதல் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கும் போது, ஹோட்டலில் நான் தங்கியிருக்கும் அறைக்கு வந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்தார் திவேந்து குரானா என பகீரங்கமாக குற்றம்சாட்டினார். இதனால் நான் கற்பமடைந்தேன் அவருக்கு தெரிந்த மருத்துவர்களை வைத்து என் கருவை கலைத்தார்.

  நீதிவேண்டும்

  நீதிவேண்டும்

  அந்த நேரத்தில் நான் பிரபலம் இல்லை என் நீண்டநாள் கனவை இந்த புகாரின் மூலம் தொலைக்க விரும்பாமல் மனவேதனையுடன் போராடிக் கொண்டு இருந்தேன். ஆனால், இப்போது நான் பிரபலம் என்பதால் எனக்குள் தைரியம் எழுந்துள்ளது எனக்கு நியாயம் வேண்டும். கனவோடும் ஆசையோடும் சினிமாவிற்குள் நுழையும் பெண்களுக்கு நீதிவேண்டும் என்று கூறினார். மேலும், கருக்கலைப்பு செய்ததற்கான ஆதாரத்தையும், கருக்கலைப்பு செய்ததற்காக கொடுத்த பண விவரத்தையும் நீதிமன்றத்தில் கொடுக்கப்படுகிறது.

  ஒரு பாடம்

  ஒரு பாடம்

  இதையடுத்து, பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இயக்குநருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை கொடுக்கப்படுகிறது. சமுதாயத்தில் பெரிய மனிதன் என்ற போர்வையில், தனது பெயரையும் புகழையும் வைத்து செய்த தவறை மறைப்பவர்களுக்கு இந்த வெப் தொடர் ஒரு பாடம் எனலாம்.

  English summary
  director Shefali Bhushan has come up with a cogent Guilty Minds Web Series. Guilty Minds Web Series.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X