twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மேரி கோம் படத்துக்கு வரிவிலக்கு.. குஜராத் அரசு அறிவிப்பு

    By Shankar
    |

    அகமதாபாத்: பெண்களை ஊக்குவிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள மேரி கோம் படத்துக்கு 100 சதவீத வரிவிலக்கு அளிக்க குஜராத் அரசு முன்வந்துள்ளது.

    இதனை அம்மாநிலத்தின் முதல் பெண் முதல்வரான ஆனந்தி பென் படேல் நேற்று அறிவித்தார்.

    Gujarat announces 100 percent tax free for Mary Kom

    மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனையும், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றவருமான மேரி கோமின் சாதனைகள் மற்றும் அவர் வாழ்க்கையில் சந்தித்த தடைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் மேரி கோம்.

    இத்திரைப்படம் விளையாட்டில் ஆர்வமுள்ள பெண்களை ஊக்குவிப்பதாக உள்ளதால் இதற்கு முழு வரி விலக்கு அளிக்க முடிவு செய்துள்ளதாக முதல்வர் ஆனந்தி பென் படேல் தெரிவித்தார்.

    இத்திரைப்படத்தை வயாகாம் 18 மீடியா நிறுவனமும், பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் பன்சாலி புரொடக்ஷன்சும் இணைந்து தயாரித்துள்ளன.

    முன்னாள் காவல்துறை பெண் அதிகாரியான கிரண் பேடி இத் திரைப்படத்தை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Gujarat Govt has announced 100 percent tax free for Mar Kom movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X