»   »  கமல், ராஜமவுலி, 'தல'க்கு சவால் விட்ட ஜி.வி. பிரகாஷ்: ஏற்பார்களா?

கமல், ராஜமவுலி, 'தல'க்கு சவால் விட்ட ஜி.வி. பிரகாஷ்: ஏற்பார்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
கமல் மற்றும் தோனிக்கு சவால் விடும் ஜி வி பிரகாஷ்

சென்னை: உலக நாயகன் கமல் ஹாஸன், டோணிக்கு சவால் விட்டுள்ளார் ஜி.வி. பிரகாஷ் குமார்.

கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்த விலை குறைந்த நாப்கின்களை தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தார். அவரின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் பேட்மேன்.

அக்ஷய் குமார் முருகானந்தமாக நடித்துள்ளார். படம் வரும் 9ம் தேதி ரிலீஸாக உள்ளது.

நடிகர்கள்

பேட்மேன் படம் ரிலீஸாக உள்ள நிலையில் பிரபலங்கள் பேட்மேன் சவால் விடுகிறார்கள். அதாவது யாருக்கு சவால் விடப்படுகிறதோ அவர் சானிடரி பேடுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட வேண்டும்.

வருண் தவான்

கோஹ்லியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் சேர்ந்து கையில் பேடுடன் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

ஜிவி பிரகாஷ்

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமைதனை கொளுத்துவோம். பெருந்தமிழர் #ArunachalamMuruganantham வழி நின்று உலகுக்கு உரக்க சொல்வோம் பெண்கள் மாதந்தோறும் எதிர் கொள்ளும் "மாதவிடாய்"இயற்கையே என்று கூறி கமல் ஹாஸன், ராஜமவுலி, டோணி ஆகியோருக்கு சவால் விட்டுள்ளார் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் குமார்.

பாராட்டு

கையில் பேடுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்ட ஜி.வி. பிரகாஷ் குமாரை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். கமலுக்கு சவால் விடுத்துள்ளதை பார்த்து உலக நாயகன் ரசிகர்களும் ஜி.வி. பிரகாஷை பாராட்டியுள்ளனர்.

English summary
GV Prakash Kumar has posted a picture of him with a sanitary pad and challenged Kamal Haasan, director SS Rajamouli and cricketer Dhoni to do the same. GV Prakash did so as a part of Padman challenge.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil