»   »  ஆக்ஷன் பில்ம்?.. ஜி.வி.பி.??.. அடியாத்தீ, இப்பவே பயந்து வருதே!

ஆக்ஷன் பில்ம்?.. ஜி.வி.பி.??.. அடியாத்தீ, இப்பவே பயந்து வருதே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நானும் படத்துல ஹீரோவாகப் போறேன் பேர்வழியென நடிக்கத் தொடங்கியதில் இருந்து இசையமைப்பதை இரண்டாம் இடத்திலேயே வைத்திருக்கிறார்.

'டார்லிங்', 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' ஆகிய படங்கள் எப்படியோ ஹிட்டாகிவிட தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார். 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த அளவுக்குப் போகவில்லை.

கைவசம் பல படங்கள் :

கைவசம் பல படங்கள் :

இந்நிலையில் இவர் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். தற்போது இவர் ‘நாச்சியார்', ‘அடங்காதே', ‘4ஜி', ‘ஐயன்கரன்', ‘செம', '100% காதல்', ‘குப்பத்து ராஜா' பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

'குற்றம் 23' இயக்குநர் :

'குற்றம் 23' இயக்குநர் :

இந்நிலையில், "ஈரம்', 'வல்லினம்' 'ஆறாது சினம்' 'குற்றம் 23' படங்களை இயக்கிய அறிவழகன் அதைத் தொடர்ந்து புதிய படத்தை இயக்கவுள்ளார். 'குற்றம் 23' படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர் அறிவழகன். கதை எழுதி முடித்தவுடன், நாயகன் இறுதி செய்யப்படவுள்ளதாக அறிவழகனுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.

ஆக்‌ஷன் ஹீரோவாக ஜி.வி.பிரகாஷ் :

ஆக்‌ஷன் ஹீரோவாக ஜி.வி.பிரகாஷ் :

தற்போது இக்கதையில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தினை மைக்கேல் ராயப்பன் தயாரிக்க முன்வந்துள்ளார். விரைவில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்கள். தற்போது திரைக்கதையை இறுதி செய்யும் பணியில் இருக்கிறார் இயக்குநர் அறிவழகன்.

 ஜி.வி.பிரகாஷுக்குக் கொட்டும் அதிர்ஷ்டம் :

ஜி.வி.பிரகாஷுக்குக் கொட்டும் அதிர்ஷ்டம் :

இந்தக் கதை ஆக்‌ஷன் கலந்த க்ரைம் த்ரில்லர் கதையாக இருக்குமாம். ஆக்‌ஷன் கதைக்கு சற்றும் பொருத்தமில்லாத ஜி.வி.பிரகாஷை எப்படி நடிக்கவைக்கத் தேர்ந்தெடுத்தார் இயக்குநர் என்பதுதான் சினிமாக்காரர்களின் மில்லியன் டாலர் கேள்வி. எது எப்படியோ ஜி.வி.பிரகாஷ் காட்டில் படமழைதான்!

English summary
G.V.Prakash to play lead role in an action thriller movie. This movie will be directed by 'Kutram 23' director arivazhagan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil