மர்மதேசத்தில் சிக்கிய ஜிவி பிரகாஷ்… அதிரடி காட்டும் கெளதம் மேனன்… திகில் கிளப்பும் 13 பட டீசர்

சென்னை: ஜிவி பிரகாஷ் குமார், கெளதம் மேனன் இருவரும் 'செல்ஃபி' என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து ஜிவி பிரகாஷ், கெளதம் கூட்டணியில் 13 என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

புதுமுக இயக்குநர் விவேக் இயக்கியுள்ள 13 திரைப்படத்தின் டீசர் செம்ம மிரட்டலாக தற்போது வெளியாகியுள்ளது.

செல்ஃபி கூட்டணி

செல்ஃபி கூட்டணி

முன்னணி இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் குமார், திரைப்படங்களிலும் ஹீரோவாக நடித்து வருகிறார். அதேபோல், தமிழ் சினிமாவில் லீடிங் இயக்குநரான கெளதம் மேனனும் தற்போது படங்களில் போலீஸ் ஆபிஸர், வில்லன் கேரக்டர்கள் கலக்கி வருகிறார். இந்நிலையில், ஜிவி பிரகாஷ், கெளதம் மேனன் இருவரும் இணைந்து 'செல்ஃபி' படத்தில் நடித்திருந்தனர். மதிமாறன் இயக்கத்தில் கடந்த ஏப்ரலில் வெளியான இந்தப் படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்தக் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளனர்.

13 திரைப்படம்

13 திரைப்படம்

செல்ஃபி படத்தை தொடர்ந்து ஜிவி பிரகாஷ், கெளதம் மேனன் இணைந்துள்ள படத்துக்கு '13' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் விவேக் இயக்கியுள்ள இந்தப் படத்தை மெட்ராஸ் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. குறுகிய காலத்தில் சின்ன பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் கெளதம் மேனன் அருள்மொழிவர்மன் என்ற பெயரில் போலீஸ் ஆபிஸராக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ஜிவி பிரகாஷ் வழக்கம்போல செம்ம யூத்தாக நடித்துள்ளார்.

வெளியானது டீசர்

வெளியானது டீசர்

இந்நிலையில், 13 படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. ஜாலியாக ஆரம்பிக்கும் இந்த டீசர், போக போக திகில் கிளப்புகிறது. ஜிவி பிரகாஷ் தனது நண்பர்களுடன் எதோ ஒரு மர்மமான பகுதிக்குள் மாட்டிக் கொள்ள, அங்கு அடுத்தடுத்து நடக்கும் சில திரில்லரான சம்பவங்கள் சிலிர்க்க வைக்கின்றன. ஹாரர் திரில்லரா, க்ரைம் திரில்லரா அல்லது இன்வெஸ்டிகேஷன் திரில்லரா என யூகிக்க முடியாத வகையில் டீசர் செம்ம மிரட்டலாக வெளியாகியுள்ளது. இந்த டீசரில் கெளதம் மேனனின் போலீஸ் ஆபிஸர் கேரக்டரும் சும்மா தாறுமாறாக இருக்கிறது.

விரைவில் ரிலீஸ்

விரைவில் ரிலீஸ்

சிந்து குமாரின் பின்னணி இசையும், சிஎம் மூவேந்தரின் ஒளிப்பதிவும் டீசரை இன்னும் மிரட்டலாக ரசிக்க வைக்கிறது. ஜிவி பிரகாஷ் குமார், கெளதம் மேனன் காம்போ ரசிகர்களிடம் செட் ஆகிவிட்டதால், 13 திரைப்படமும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்நிலையில் தற்போது வெளியான 13 படத்தின் டீசரும் வைரலாகி வருகிறது. இறுதிக்கட்ட பணிகளில் பிசியாக இருக்கும் 13 படக்குழு, விரைவில் ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X