ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து தீர்ப்பு வந்துடுச்சு.. பெண் குழந்தையின் நிலை என்ன?

சென்னை: பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் பின்னணிப் பாடகி சைந்தவி ஆகியோருக்கு சென்னை குடும்பநல நீதிமன்றம் பரஸ்பர விவாகரத்து வழங்கியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் ஜி.வி. பிரகாஷ், 2013-ம் ஆண்டு பின்னணிப் பாடகி சைந்தவியை மணந்தார். இந்த தம்பதியினருக்கு அன்வி என்ற மகள் உள்ளார்.

GV Prakash and Saindhavi officially divorced now Court gives judgement
Photo Credit:

சுமார் 12 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த இருவரும் பிரிவதாக அண்மையில் அறிவித்தனர். கடந்த மாதம் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்தனர்.

சேர்ந்து வாழ விரும்பவில்லை: ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளராகவும் ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார். பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டு பா ஆண்டுகள் காதலுடன் வாழ்ந்து வந்த நிலையில், விவாகரத்து முடிவுக்கு இருவரும் வந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், கடந்த ஜூன் 25 ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். தாங்கள் இருவரும் இணைந்து வாழ விரும்பவில்லை என்றும், பிரிந்து வாழவே விரும்புவதாகவும் தனித்தனியாக நீதிபதியிடம் தெரிவித்தனர்.

மகளை சைந்தவியே பார்த்துக்கொள்ளட்டும்: இந்த விசாரணையின் போது, தங்கள் மகளை சைந்தவி கவனித்துக் கொள்வதில் தனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என ஜி.வி. பிரகாஷ் நீதிபதி முன் தெரிவித்தார். இதை நீதிமன்றம் பதிவு செய்துகொண்டது.

இதனைத் தொடர்ந்து, விவாகரத்து வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவருக்கும் பரஸ்பர விவாகரத்து வழங்கப்படுவதாக சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

ரசிகர்கள் மற்றும் உறவினர்கள் வருத்தம்: எப்படியாவது ஜி.வி. பிரகாஷ் குமார் மீண்டும் தனது மனைவி சைந்தவியுடன் இணைந்து விடுவார் என்றே பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், இருவருமே இனிமேல் இணைந்து வாழ்வது சரிபட்டு வராது என்கிற முடிவுக்கு வந்த நிலையில், நீதிமன்றம் அவர்களது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் தீர்ப்பு வழங்கியது. ஆனால், இந்த தீர்ப்பு ரசிகர்கள் மற்றும் இருவரது குடும்ப உறவினர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக அப்பாவை மகள் ரொம்பவே மிஸ் செய்வார் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X