»   »  குறுக்க தண்ணி லாரி எதுவும் வந்துறாம காப்பாத்துப்பா.. ஆச்சரியப்படுத்தும் ஜி.வி.பிரகாஷின் ஸ்பீட்!

குறுக்க தண்ணி லாரி எதுவும் வந்துறாம காப்பாத்துப்பா.. ஆச்சரியப்படுத்தும் ஜி.வி.பிரகாஷின் ஸ்பீட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
No.1 ஹீரோ ஜிவி பிரகாஷ்!

சென்னை : 'டார்லிங்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நிறைய படங்களை கையில் வைத்திருந்தாலும் சிக்கல் இல்லாமல் முடித்துக் கொடுத்து வருகிறார். ஜி.வி.பிரகாஷின் வேகத்தைப் பார்த்து தமிழ் சினிமாவே வியக்கிறதாம்.

பாண்டிராஜ் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் ஏற்கெனவே நடித்து முடித்துள்ள 'செம' ரிலீஸுக்கு ரெடியாகியுள்ள நிலையில் 'குப்பத்து ராஜா' படமும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்தப்படங்களை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'ஐங்கரன்', 'சர்வம் தாள மயம்', அடங்காதே ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.

GV prakash busy with many films

'குப்பத்து ராஜா' படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் முடிந்து விட்டதைத் தொடர்ந்து 'சர்வம் தாள மயம்' படத்தின் படப்பிடிப்பு மேகாலயாவில் நடந்து வந்தது. இந்நிலையில் மேகாலயாவில் நடைபெற்ற படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.

'மின்சாரக்கனவு', 'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்' ஆகிய படங்களுக்கு பிறகு ராஜீவ் மேனன் இயக்கும் இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா முரளி நடிக்கிறார். வினீத் இப்படத்தில் நடித்திருக்கிறார்.

இசைக்கும் பாடல்களுக்கும் அதிக முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷின் மாமா ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்து வருகிறார். ஸ்ட்ரைக் முடிந்ததும் இப்படத்தின் அடுத்த ஷெட்யூல் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது.

எல்லாப் படங்களையும் முடித்துக்கொடுத்துவிட்டு பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறாராம் ஜி.வி.பி. அதனால், இந்த வருடத்தில் வேறு எந்தப் படத்தையும் ஒப்புக்கொள்வதில்லை எனும் முடிவில் இருக்கிறாராம்.

English summary
GV Prakash, who made his debut as hero through 'Darling'. Tamil cinema is surprising by the speed of GV Prakash. The shooting of 'Sarvam Thaala Mayam' in Meghalaya is over.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X