»   »  விஜய்யை 'ஓவராக' வாழ்த்தப் போய் ரஜினி ரசிகர்களிடம் வறுபடும் ஜிவி பிரகாஷ்!

விஜய்யை 'ஓவராக' வாழ்த்தப் போய் ரஜினி ரசிகர்களிடம் வறுபடும் ஜிவி பிரகாஷ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்பெல்லாம் ரஜினியை தலைவர், சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் சொல்லி யாராவது வாழ்த்திப் பேசினால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமாகி, சம்பந்தப்பட்ட நடிகரின் படங்களையும் பார்ப்பது வழக்கம். அல்லது அந்த நடிகர் அல்லது கலைஞரை தங்கள் 'குட் புக்ஸில்' வைப்பது வழக்கம்.

இப்போது அப்படியில்லை. ரொம்பவே உஷாராகிவிட்டார்கள். ரஜினியை யாராவது ஓஹோவெனப் புகழ்வதைப் பார்த்தாலே டென்ஷனாகி, 'இவன் அடுத்து எங்கோ காலை வாரப் போறான்.. உஷார் நண்பா' என எச்சரிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

சில தினங்களுக்கு முன் இப்படித்தான் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிக்க வந்திருக்கும் ஜிவி பிரகாஷ் ரஜினியை 2.ஓ படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்தார். எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தின் தலைப்புக்காக ரஜினியிடம் அனுமதியும் ஆசியும் பெற்றார்.

GV Prakash earns the wrath of Rajini and Ajith fans

ரஜினியைச் சந்தித்து விட்டு வெளியில் வந்ததிலிருந்து ரஜினியைப் பற்றி வானளாவப் புகழ்ந்து கொண்டிருந்தார். ஆனால் ரஜினி ரசிகர்கள் இவரை ஒரு பொருட்டாகவே கண்டு கொள்ளவில்லை.

அப்படியே கட் பண்ணால்...

இன்று விஜய் பிறந்த நாள். அவரை வாழ்த்த வேண்டும் என்பதற்காக 'உண்மையாகவே அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான்... ' என்று ட்விட்டரில் எழுதி வைக்க, அடுத்த நொடியிலிருந்து வெளுக்க ஆரம்பித்துவிட்டார்கள் ரஜினி ரசிகர்கள்.

'நீ விஜய்யை தாராளமாக வாழ்த்திக்கோ.. அதுக்கு ஏன் சூப்பர் ஸ்டார் கிட்ட போறே.. அடுத்த புரட்சித் தலைவர், அடுத்த நடிகர் திலகம், அடுத்த புரட்சித் தலைவின்னு சொல்ல முடியுமா உன்னால... அப்புறம் எப்படி அடுத்த சூப்பர் ஸ்டார்னு மட்டும் சொல்ற' என்று ஏக வசனத்தில் விட்டு வெளுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

'பிட்டுப் படத்தில் (த்ரிஷா இல்லன்னா நயன்தாரா) நடிக்கிற பையனெல்லாம் அடுத்த சூப்பர் ஸ்டார்னு பேச ஆரம்பிச்சிட்டானே,' என்று இன்னொரு க்ரூப் ஜிவி பிரகாஷை கரித்துக் கொண்டிருக்கிறது.

இன்னொரு பக்கம் அஜீத்தின் ரசிகர்களும் களத்தில் குதித்து, 'அதெப்படி அடுத்த சூப்பர் ஸ்டார்னு விஜய்யைச் சொல்லலாம்.. ஒரே சூப்பர் ஸ்டார்தான்... அவர் ரஜினி. ஒரே தல அஜீத்... அந்த மாதிரி ஒரு பட்டத்தோடு நிறுத்திக்கங்க விஜய் பேன்ஸ்' என எச்சரித்துள்ளனர்.

பிறந்த நாளன்னிக்கு விஜய் ரசிகர்களை குளிர்விப்பதாக நினைத்துக் கொண்டு குளவிக் கூட்டை கலைச்சிட்டாரே இந்த ஜிவி பிரகாஷ்.. இவருக்கு எதுக்கு இந்த ரசிக வேலை... அனைவருக்கும் பொதுவானவராக இருப்பதுதான் கலைஞனுக்கு அழகு என்கிறார்கள் இந்த சண்டையை வேடிக்கைப் பார்ப்போர்!

English summary
The hardcore fans of Rajinikanth and Ajith have now slapping GV Prakash in Social media through memes and comments for narrating Vijay as next superstar.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil