twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கஷ்டம்ன்னு வந்துட்டா கர்ணனா மாறிடுவாப்ல… கல்லூரி மாணவிக்கு செய்த உதவிய இசை அசுரன் ஜிவி பிரகாஷ்..

    |

    சென்னை: சூரரைப் போற்று படத்தின் பின்னணி இசைக்காக தேசிய விருது பெற்றுள்ளார் ஜிவி பிரகாஷ்குமார்.

    டெல்லியில் நடைபெற்ற தேசிய விருது வழங்கும் விழாவில் ஜிவி பிரகாஷ்க்கு விருது வழங்கப்பட்டது.

    இந்நிலையில், டிவிட்டரில் உதவி கேட்ட கல்லூரி மாணவிக்கு இசையமைப்பாளார் உதவிய சம்பவம் வைரலாகி வருகிறது.

    இசை அசுரன் ஜிவி பிரகாஷ்

    இசை அசுரன் ஜிவி பிரகாஷ்

    ஏ.ஆர். ரஹ்மான் இசையில் 'ஜென்டில் மேன்' படத்தில் இடம்பெற்ற 'சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே' என்ற பாடலின் தொடக்க வரிகளை தனது மழலை குரலில் பாடி அசத்தினார் ஜி.வி. பிரகாஷ் குமார். அங்கிருந்து மெல்ல மெல்ல தனது இசை சிறகை விரித்து பறக்கத் தொடங்கிய ஜி.வி. வசந்தபாலன் இயக்கிய 'வெயில்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்தப் படத்தில் 'வெயிலோடு விளையாடி' 'உருகுதே மருகுதே' என பாடல்களிலும், பின்னணி இசையிலும் வெரைட்டி காட்டி அசத்தினார்.

    பொல்லாதவன் டூ அசுரன்

    பொல்லாதவன் டூ அசுரன்

    அதன்பின்னர் அஜித்தின் 'கிரீடம்' தனுஷின் 'பொல்லாதவன்' ஆகிய படங்கள் மூலம் இன்னும் டாப் கியரில் பயணித்தார் ஜிவி பிரகாஷ். பொல்லாதவன் படத்தை தொடர்ந்து ஆடுகளம், விசாரணை, அசுரன் என வெற்றிமாறன் ஜி.வி. பிரகாஷ் கூட்டணி கோலிவுட்டில் மாஸ் காட்டியது. ஆயிரத்தில் ஒருவன், மதராசபட்டினம், ஆடுகளம், விசாரணை, அசுரன் ஆகிய படங்களில் ஜி.வி. பிரகாஷின் இசை ரசிகர்களை மெய்மறக்க செய்திருந்தது. ஜி.விக்கு எப்போதோ தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும் ஆனால், இப்போது சூரரைப் போற்று படத்தின் பின்னனி இசைக்காக விருது வென்றுள்ளார்.

    சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்

    சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்

    இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் கலக்கி வரும் ஜிவி பிரகாஷ், சோஷியல் மீடியாக்களிலும் ரொம்பவே ஆக்டிவாக இருக்கிறார். அரசியல், சினிமா உட்பட எந்த பிரச்சினையாக இருந்தாலும் டிவிட்டரில் தைரியமாக கருத்து சொல்வதில் ஜிவி பிரகாஷ் தயங்கியதே இல்லை. இந்நிலையில், டிவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் ஜிவி பிரகாஷிடம் கல்லூரி மாணவி ஒருவர் காலேஜ் எக்ஸாம் பீஸ் கட்ட உதவி கேட்டிருந்தார். "ஹாய் சார், என தனது பெயரை அறிமுகம் செய்துவிட்டு, கும்பகோணம். நான் பிசிஏ படித்து வருகிறேன். இந்த மாதம் தேர்வு தொடங்குகிறது. அதற்கான ஃபீஸ் கட்ட உதவி செய்யுங்கள்" என்று கோரிக்கை வைத்திருந்தார்.

    உதவிய ஜிவி பிரகாஷ்

    உதவிய ஜிவி பிரகாஷ்

    கல்லூரி மாணவி டிவிட்டரில் வைத்திருந்த கோரிக்கையை பார்த்த ஜிவி பிரகாஷ் உடனடியாக அவருக்கு உதவி செய்துள்ளார். அந்த மாணவியின் டிவிட்டர் பதிவுக்கு ரீப்ளே செய்துள்ள ஜிவி பிரகாஷ், "உங்கள் ஜீபே நம்பருக்கு பணம் அனுப்பிவிட்டேன் எனக் கூறியுள்ளார்." உதவி கேட்ட மாணவியின் ஜீபே நம்பர் வாங்கி, அவருக்கு உடனே ஜிவி பிரகாஷ் உதவி செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. கஷ்டம்ன்னு வந்துட்டா கர்ணனாக மாறிய இசை அசுரன் ஜிவி பிரகாஷ்க்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Recently Music Composer GV Prakash received the National Award for the Soorarai Pottru film. A college girl asked GV Prakash on Twitter for help in paying the exam fees. GV Prakash immediately helped her by sending money on Gpay
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X