»   »  ஜி.வி. பிரகாஷ் சொல்லும் 'அந்த நாள்' மட்டும் வரவேக் கூடாது கடவுளே

ஜி.வி. பிரகாஷ் சொல்லும் 'அந்த நாள்' மட்டும் வரவேக் கூடாது கடவுளே

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்தாவது மக்கள் திருந்த வேண்டும்.

உலகிற்கே சோறு போடும் விவசாயி உண்ண சரியான சாப்பாடு இல்லாமல் பசியால் வாடுகிறான். வாடும் பயிரை பார்த்து நெஞ்சை பிடித்துக் கொண்டு செத்து மடிகிறான்.

GV Prakash is very caring about farmers

விவசாயம் செய்ய வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் விஷம் குடித்து தற்கொலை செய்கிறான். இதை எல்லாம் செய்தித்தாள்களிலும், டிவி சேனல்களிலும் பார்த்துவிட்டு மக்கள் அவரவர் வேலையை கவனிக்கிறார்கள்.

நாம் மூன்று நேரமும் பசியாறும் போது விவசாயிகளுக்கு மனதார நன்றி தெரிவிக்க வேண்டும். ஆனால் விவசாயியை யாருமே மதிப்பது இல்லை. டெல்லி வரை சென்று போராட்டம் நடத்தியும் நம் தமிழக விவசாயிகளை யாரும் கண்டுகொள்ளாத அவல நிலை.

இந்நிலையில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் விவசாயியின் பெருமைபாடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஒரு நாள் தங்கத்தை விட அதிகமான விலையில் சாப்பாடு விற்கப்படும் அன்று தான் விவசாயிகளின் அருமை நமக்கு புரியும் என்று அந்த புகைப்படத்தில் வாசகம் உள்ளது.

English summary
Actor cum music director GV Prakash has released a picture of a farmer on his twitter page.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil