Don't Miss!
- News
சென்னையில் பிப்ரவரி 1,2 தேதிகளில் ஜி20 கல்விப் பணிக் குழுவின் முதலாவது கூட்டம்
- Lifestyle
இந்த சூப்பர் உணவுகள் தாமதமான உங்கள் மாதவிடாயை சில மணி நேரங்களில் வரவைக்குமாம்...!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
ரவுடி பேபிக்கு டஃப் கொடுக்க தயாரான தனுஷ்.. வாத்தி படத்தின் ஹாட் அப்டேட்டை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்!
சென்னை: திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி மற்றும் தி கிரேமேன் என அடுத்தடுத்து தனது ரசிகர்களை திக்குமுக்காட வைக்க காத்திருக்கிறார் நடிகர் தனுஷ்.
தனுஷ் நடித்து ஓடிடியில் வெளியான ஜகமே தந்திரம் ஓடவில்லை என்றாலும், தனது மனதுக்கு நெருக்கமான படம் என தற்போது ட்வீட் போட்டுள்ளார். மேலும், ரஜினியின் ஜெயிலர் படத்தின் போஸ்டரையும் ரீட்வீட் செய்து அந்த படத்துக்கு ஆவலுடன் காத்திருப்பதையும் தெரிவித்தார்.
இந்நிலையில், வாத்தி படத்தின் பாடல் குறித்த ஹாட் அப்டேட்டை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் வெளியிட்டு தனுஷ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார்.
ரஜினிகாந்துக்கு
வாழ்த்து
சொன்ன
தனுஷ்..
மாமா
மாப்பிள்ளைனா
சும்மாவா?

தோல்விகளை தாண்டி
ஹீரோக்களுக்கு எப்போதுமே வெற்றித் தோல்வி என்பது சகஜம் தான். ஓடிடியில் வெளியான ஜகமே தந்திரம், அட்ரங்கி ரே மற்றும் மாறன் உள்ளிட்ட 3 படங்களும் அடுத்தடுத்து படு தோல்வியை சந்தித்த நிலையில், தனுஷ் ரசிகர்கள் ரொம்பவே வருத்தத்தில் உள்ளனர். இந்நிலையில், கூடிய சீக்கிரமே தரமான ஒரு வெற்றியை கொடுத்து நடிகர் தனுஷ் மீண்டும் தன்னை நிரூபிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

வெற்றிமாறன் இல்லை
அசுரன் படத்தின் அசுரத்தனமான வெற்றிக்கு பிறகு மீண்டும் அப்படியொரு வெற்றியை தனுஷுக்கு கொடுக்க இப்போதைக்கு வெற்றிமாறன் உடன் அவர் இணைந்து பணியாற்றவில்லை. ஆனாலும், மற்ற முன்னணி இயக்குநர்களுடன் தனுஷ் நடித்து வரும் நிலையில், கூடிய சீக்கிரமே மிரட்டலான ஒரு படத்தைக் கொடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

படு பிசி
தோல்விகளை கண்டு ஹீரோக்கள் எப்போதும் துவண்டு போக மாட்டார்கள். அடுத்தடுத்த படங்களில் அவர்கள் கம்பேக் கொடுத்து விடுவார்கள். வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ள திருச்சிற்றம்பலம் தனுஷுக்கு கம்பேக் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் நானே வருவேன், தெலுங்கு தமிழ் பைலிங்குவல் படமான வாத்தி மற்றும் ஹாலிவுட் படமான தி கிரே மேன் என ரசிகர்களை கூடிய விரைவில் திக்குமுக்காட செய்யப் போகிறார் தனுஷ்.

வாத்தி அப்டேட்
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் வாத்தி படத்தின் அட்டகாசமான அப்டேட்டை நடிகர் ஜிவி பிரகாஷ் பிரத்யேகமாக தனுஷ் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளார். வாத்தி படத்திற்கான பாடல் ஒலிப்பதிவு தீயாக நடைபெற்று வருகிறது எனக் குறிப்பிட்டுள்ள ஜிவி பிரகாஷ் விரைவில் ஹெவி டான்ஸ் ஒன்றையும் எதிர்பார்க்கலாம் எனக் கூறி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளார்.

ரவுடி பேபிக்கு டஃப்
மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் ஒரு பில்லியன் வியூஸ் கடந்து இமாலய சாதனை செய்தது. இந்நிலையில், அப்படியொரு பாடல் வாத்தி படத்திலும் இடம்பெறும் என்பது ஜிவி பிரகாஷின் இந்த ட்வீட்டை பார்த்தாலே தெரிகிறது. மாணவனாகவும், வாத்தியாராகவும் நடிகர் தனுஷ் நடித்து வரும் வாத்தி படம் இறுதிகட்டத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கூடிய சீக்கிரமே அந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.