இட்லி கடை பிளாக்பஸ்டர்.. இந்த ஆண்டு 2 பிளாக்பஸ்டர்.. சந்தோஷத்தில் ஜி.வி. பிரகாஷ் சொன்னதை பாருங்க!

சென்னை: வாத்தி படத்தில் இடம்பெற்ற பாடலுக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வாங்கிய ஜி.வி. பிரகாஷ் இட்லி கடை படத்திற்காக இன்னொரு முறையும் தேசிய விருது வாங்குவார் என அவரது ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட தனுஷ் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் வெளியான குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து இந்த இட்லி கடை படமும் பிளாக்பஸ்டர் என பதிவிட்டு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

GV Prakash Kumar says after GBU he give another blockbuster with Dhanush s Idly Kadai
Photo Credit:

சமீபத்தில், ஜி.வி. பிரகாஷுக்கும் சைந்தவிக்கும் நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து வழங்கிய நிலையில், வருத்தத்தில் இருந்த ரசிகர்கள் தற்போது அவரது இட்லி கடை ட்வீட்டை பார்த்து அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இட்லி கடை பிளாக்பஸ்டர்: இன்பன் உதயநிதி ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் வழங்கிய இட்லி கடை படத்தை இயக்கி நடித்திருந்தார் நடிகர் தனுஷ். ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்தது. ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, இளவரசு உள்ளிட்ட நடிகர்கள் சிறப்பான பங்களிப்பை அளிக்க இட்லி கடை படம் நேற்று வெளியாகி டபுள் டிஜிட் வசூலை ஈட்டியுள்ளது.

சந்தோஷத்தில் ஜி.வி. பிரகாஷ்: இந்த ஆண்டு தனது இசையில் வெளியான அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தைத் தொடர்ந்து 2வதாக பிளாக்பஸ்டர் படமாக தனுஷின் இட்லி கடை படம் மாறியுள்ளது என்றும் அதற்காக இந்த யூனிஅர்ஸுக்கு தான் நன்றி சொல்வதாக ஜி.வி. பிரகாஷ் தற்போது ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். தனுஷின் குபேரா படம் தமிழ்நாட்டில் பெரிதாக வசூல் செய்யாமல் போன நிலையில், இட்லி கடை முதல் நாளே நல்ல வசூலை தமிழ்நாட்டில் ஈட்டியுள்ளது.

மதராஸி, டிராகன் பட வசூலை முந்துமா?: இந்த ஆண்டு தமிழில் வெளியான படங்களில் சிவகார்த்திகேயனின் மதராஸி மற்றும் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் உள்ளிட்ட படங்களின் வசூலை தனுஷின் இட்லி கடை முந்துமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. தனுஷ் உள்ளிட்ட நடிகர்களின் சம்பளங்களுடன் சேர்த்து படத்தின் பட்ஜெட் 80 கோடி இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தால் தான் இட்லி கடை படம் ஹிட் எனப்படும் என்றும் 150 கோடி வசூலை கடந்தால் தான் பிளாக்பஸ்டர் என்று சொல்ல முடியும் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

நல்ல படம்: படத்தின் பட்ஜெட், பாக்ஸ் ஆபீஸ் போட்டியை எல்லாம் தாண்டி இயக்குநராக தனுஷ் ஒரு நல்ல படத்தை கொடுத்துள்ளார் என பலரும் பாராட்டி வருகின்றனர். மக்களுக்கு கடைசி வரை போரடிக்காமல் ஒரு நல்ல படமாக இட்லி கடை வந்திருப்பதே இந்த படத்தை பிளாக்பஸ்டர் படமாக மாற்றியுள்ளது. முதல் வார முடிவில் அதிகபட்சமாக இட்லி கடை திரைப்படம் 50 கோடி வசூலையாவது கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காந்தாரா சாப்டர் 1 படத்தின் அதிர்வலையில் சிக்கி இட்லி கடை சேதம் அடையாமல் இருந்தால் சரி என்று கோலிவுட் வட்டாரங்கள் பேசத் தொடங்கியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X