»   »  27ம் தேதி அபாயின்மென்ட் வாங்கினாரே லட்சுமி ராமகிருஷ்ணன்: ஜி.வி. பிரகாஷை சந்தித்தாரா?

27ம் தேதி அபாயின்மென்ட் வாங்கினாரே லட்சுமி ராமகிருஷ்ணன்: ஜி.வி. பிரகாஷை சந்தித்தாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 27ம் தேதி ஜி.வி. பிரகாஷும், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனும் சந்தித்து பேசினார்களா என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

கடவுள் இருக்கான் குமாரு படத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை மரண கலாய் கலாய்த்திருந்தார்.

இதை பார்த்த லட்சுமி பாலாஜி, படத்தின் ஹீரோ ஜி.வி. பிரகாஷ் மற்றும் இயக்குனர் ராஜேஷை ட்விட்டரில் விளாசினார்.

லட்சுமி

லட்சுமி

ஜி.வி. பிரகாஷ் இப்படிப்பட்ட படங்களில் தான் நடிப்பார். நல்ல கதாபாத்திரம் உள்ள கதையில் நடிக்க தயாராக இருக்கிறாரா என்று லட்சுமி ட்விட்டரில் கேள்வி எழுப்பினார்.

ஜி.வி. பிரகாஷ்

ஜி.வி. பிரகாஷ்

நல்ல கதை இருந்தால் நடிக்க நான் ரெடி என்று லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஜி.வி. பிரகாஷ் ட்விட்டரில் பதில் அளித்தார். உடனே லட்சுமி ஜி.விக்கு கதை சொல்ல நவம்பர் 27ம் தேி அபாயின்மென்ட் வாங்கினார்.

ட்விட்டர்

ட்விட்டர்

சொல்வதெல்லாம் உண்மை கலாய்க்கப்பட்ட விவகாரத்தில் லட்சுமி ட்விட்டரில் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டே இருந்தார். இந்நிலையில் அவர் கடந்த 23ம் தேதி ட்விட்டரை விட்டே வெளியேறினார்.

சந்திப்பு நடந்ததா?

சந்திப்பு நடந்ததா?

குறிப்பிட்டபடி நவம்பர் 27ம் தேதி லட்சுமி ராமகிருஷ்ணன் ஜி.வி. பிரகாஷை சந்தித்து கதை சொன்னாரா, அவருக்கு கதை பிடித்ததா என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். லட்சுமியோ ட்விட்டரில் இல்லை. ஜி.வி. இது பற்றி ஏதுவும் ட்வீட்டவில்லை.

English summary
It is not clear whether actress cum director Lakshmi Ramakrishnan met actor GV Prakash as discussed.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil