»   »  அஜீத்தை நக்கல் செய்த ஜி.வி. பிரகாஷ்: கழுவிக் கழுவி ஊத்திய தல ரசிகர்கள்

அஜீத்தை நக்கல் செய்த ஜி.வி. பிரகாஷ்: கழுவிக் கழுவி ஊத்திய தல ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ட்விட்டரில் அஜீத்தை ஆமை என்று கூறி தல ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார் நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார்.

இசையமைப்பாளராக திரையுலகிற்கு வந்து ஹீரோவாகியுள்ளவர் ஜி.வி. பிரகாஷ் குமார். அவருக்கு திடீர் என என்ன ஆனதோ தெரியவில்லை ட்விட்டரில் ரசிகர்கள் ஏதாவது கேட்டால் நக்கலாக யாராவது பெரிய நடிகரை வம்புக்கு இழுக்கிறார்.

GV Prakash makes fun of Ajith

ட்விட்டரில் யாரோ ஒருவர் போட்ட ட்வீட்டை பார்த்த ஜி.வி. பிரகாஷ் குமார் அஜீத்தை ஆமை என்று படம் போட்டு கிண்டல் செய்துள்ளார். இதை பார்த்த தல ரசிகர்கள் ட்விட்டரில் படையெடுத்து ஜி.வி.யை வசை பாடித் தீர்த்தனர்.

தல ரசிகர்கள் கொந்தளித்ததை பார்த்த ஜி.வி. நைசாக தான் போட்ட ட்வீட்டை நீக்கிவிட்டார். இதே போன்று தான் தனுஷையும் பற்றி ட்வீட் போட்டு அதையும் நீக்கிவிட்டார் ஜி.வி.

இந்த ஜி.வி.க்கு என்ன ஆனது ஏன் ட்விட்டரில் இப்படி தேவையில்லாமல் பேசுகிறார் என்று பலரும் வியக்கிறார்கள்.

English summary
Music director cum actor GV Prakash Kumar took a dig at Ajith on twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil