»   »  ரஜினியின் குப்பத்து ராஜா... ஜிவி பிரகாஷ் மட்டும் விட்டுடுவாரா?

ரஜினியின் குப்பத்து ராஜா... ஜிவி பிரகாஷ் மட்டும் விட்டுடுவாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

என்னாச்சு கோலிவுட் படைப்பாளிகளுக்கு... சொந்தமாக ஒரு தலைப்புக் கூடவா வைக்க முடியவில்லை. இன்று ஒரே நாளில் மூன்று ரஜினி படத் தலைப்புகளை தங்கள் படங்களுக்குச் சூட்டியுள்ளனர்.

எல்லாமே பெரிய படங்கள். ஒரு படத்தில் விஜய் நடிக்கிறார். தலைப்பு மூன்று முகம். அடுத்த படம் விஜய் ஆன்டனி. அதற்கு தலைப்பு காளி.

GV Prakash movie titled as Kuppathu Raja

இப்போது ஜிவி பிரகாஷ் நடிக்கும் ஒரு படத்துக்கு குப்பத்து ராஜா எனத் தலைப்பிட்டுள்ளனர்.

1979-ல் டிஆர் ராமண்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான படம் இந்த குப்பத்து ராஜா. அன்றைக்கு பட்டி தொட்டியெல்லாம் இந்தப் படம் குறித்த பேச்சுதான்.

இப்போது அது ஜிவி பிரகாஷ் படத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறது. தொடர்ந்து படுதோல்விப் படங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஜிவி, இந்த ரஜினி தலைப்பு காப்பாற்றும் என்று நம்பிவிட்டார் போலிருக்கிறது.

பாபா பாஸ்கர் இயக்கும் இந்தப் படத்தில், ஜிவிக்கு ஜோடியாக நடிக்கிறார் பூனம் பாஜ்வா.

ஜிவி பிரகாஷ் கையில் இப்போது ஐங்கரன், 4ஜி, அடங்காதே, செம, சர்வம் தாள மயம், நாச்சியார், குப்பத்து ராஜா, சசி இயக்கும் படம் உள்பட பத்துப் படங்கள் உள்ளன.

English summary
GV Prakash has captured Rajinikanth's another movie title Kaali for his next project.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil