Just In
- 1 min ago
‘’கர்ணன்’’ ரொம்ப நல்லா இருக்கு..வீட்டிற்கே சென்று பாராட்டிய விக்ரம்
- 27 min ago
அடக்கடவுளே.. ஜார்ஜியாவில் தளபதி 65 படப்பிடிப்புக்கு இப்படியொரு சிக்கலா? என்ன செய்ய போகிறார் விஜய்?
- 1 hr ago
போகட்டும் ரைட்..... ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் டிரைவர் ஜமுனா ஷூட்டிங் ஆரம்பம் !
- 1 hr ago
கர்ணன்ல கலக்கிட்டீங்க.. பையன் படத்தை தரமா பண்ணிடுங்க.. மாரி செல்வராஜை வாழ்த்திய சியான் விக்ரம்!
Don't Miss!
- Sports
டெல்லி கேபிடல்சுக்கு அடுத்த இடி... நார்ட்ஜேவுக்கு கொரோனா பாதிப்பு... தனிமைப்படுத்தப்பட்ட பௌலர்
- News
அம்பேத்கர் கனவை நிறைவேற்றும் மோடி; பெரியார் சாலையை மாற்ற எதிர்ப்பு... திராவிட டோனில் வானதி சீனிவாசன்
- Automobiles
காருக்கான காப்பீட்டை உரிய நேரத்தில் பெற வேண்டும் ஏன்?... ப்ளீஸ் இத மட்டும் அலட்சியப்படுத்தாதீங்க!!
- Finance
ஏப்ரல் மாதம் கார், பைக் விற்பனை 20% பாதிக்கும்.. என்ன காரணம் தெரியுமா..?
- Lifestyle
நீங்கள் எடையை குறைக்க எடுத்துக்கொள்ளும் இந்த டயட் உங்கள் உடல் எடையை அதிகரிக்கத்தான் செய்யுமாம்...!
- Education
மாதம் ரூ.1.25 லட்சம் ஊதியம்! தேர்வு கிடையாது! மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இதோ எங்க வீட்டு இளவரசி.. செம க்யூட்டான குழந்தை ’அன்வி’ புகைப்படத்தை வெளியிட்ட ஜி.வி. பிரகாஷ்!
சென்னை: இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி. பிரகாஷ் தனது பெண் குழந்தை 'அன்வி'யின் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி தம்பதியினர் தங்களது முதல் குழந்தையை வரவேற்றனர்.
இந்நிலையில், தற்போது தான் தங்களின் குழந்தையின் முகத்தை உலகிற்கு அறிமுகப்படுத்துகின்றனர்.
மாடல்ன்னா நீங்கதான்.. டீப் நெக் டாப்பில் ஒய்யார போஸ் கொடுத்த நடிகை.. பாராட்டி தள்ளும் ஃபேன்ஸ்!

காதல் திருமணம்
பள்ளியில் படிக்கும் போதே ஜி.வி. பிரகாஷும், பாடகி சைந்தவியும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2013ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி, திரை பிரபலங்கள் சூழ கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். இசையமைப்பாளராகவும், நடிகராகவும் திரைத்துறையில் கலக்கி வரும் ஜி.வி. பிரகாஷ், காதல் வாழ்க்கையிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

ஹீரோ அவதாரம்
இசையமைப்பாளராக கலக்கி வந்த ஜி.வி. பிரகாஷ் திருமணத்திற்கு பிறகு ஹீரோ அவதாரம் எடுத்தார். பென்சில் படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகம் ஆனாலும், ரிலீசான அவரது முதல் படம் டார்லிங் தான். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்..

5 படம்
கடந்த ஆண்டு மட்டும் ஹீரோவாக ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் சர்வம் தாள மயம், குப்பத்து ராஜா, வாட்ச்மேன், சிவப்பு மஞ்சள் பச்சை மற்றும் 100% காதல் என மொத்தம் 5 படங்கள் ரிலீசாகின. அதே போல அசுரன் படத்திற்கு இசையமைத்து வேற லெவலில் மிரட்டி இருந்தார் ஜி.வி. பிரகாஷ்.

லாக்டவுன் சந்தோஷம்
இந்த லாக்டவுனில் ஜி.வி. பிரகாஷ் குடும்பத்தில் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியாக கடந்த ஏப்ரல் 20ம் தேதி ஜி.வி. பிரகாஷ், சைந்தவி தம்பதியினருக்கு அழகான குட்டி இளவரசி பிறந்தது. அந்த மகிழ்ச்சியை சமூக வலைதளத்தில் தெரிவிக்க, பல பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்தனர்.

குட்டி இளவரசி
இந்நிலையில், தற்போது முதன்முறையாக தனது அழகிய மகள் அன்வியின் அழகான போட்டோஷூட் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டு, எங்க வீட்டு இளவர்சி என ட்வீட் போட்டுள்ளார். குட்டி இளவரசியை பார்த்த ஜி.வி. பிரகாஷின் ரசிகர்கள் குழந்தை வாழ்த்தி வருகின்றனர்.

அழகி
பூக்கள் மற்றும் செடிகளை வைத்து அழகான அலங்காரத்துடன் இயற்கை தேவதை போல குழந்தை அன்வி இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்த உடனே, ஜி.வி. பிரகாஷின் தங்கையும் நடிகையுமான பவானி ஸ்ரீ, அழகி என தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த புகைப்படத்தை ரீ-ட்வீட் செய்து கொஞ்சித் தீர்த்துள்ளார்.

9 படங்கள்
ஜெயில், ஐங்கரன், அடங்காதே, ஆயிரம் ஜென்மங்கள், 4ஜி, காதலை தேடி நித்யானந்தா, காதலிக்க யாருமில்லை, பேச்சலர், டிராப் சிட்டி என மொத்தம் 9 படங்கள் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் ரிலீசுக்கு தயாராக உள்ளன. மேலும், சூர்யாவின் சூரரைப் போற்று, தலைவி, வாடிவாசல் உள்ளிட்ட படங்கள் அவரது இசையில் மிரட்ட உள்ளன.