Don't Miss!
- News
செவ்வாய் பெயர்ச்சி 2022: இனி இந்த ராசிக்காரர்களின் காட்டில் பணமழைதான்!..என்ஜாய்!!
- Finance
Langya virus: இந்தியர்களும், இந்திய முதலீட்டாளர்களும் பயப்பட வேண்டுமா..?
- Sports
என்ன கொடுமை சார் இது ? நியூசி வீரர் டிரெண்ட் பவுல்ட் எடுத்த வினோத முடிவு..கிரிக்கெட் உலகிற்கு சோகம்
- Lifestyle
நீங்க சாப்பிடும் இந்த உணவுகளில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளதாம்... இது மாரடைப்பை ஏற்படுத்துமாம்!
- Technology
Jio சுதந்திர தின ஆபர்: 75GB FREE டேட்டாவுடன் சிங்கிள் ரீசார்ஜ்ல டபுள் நன்மைகள்!
- Automobiles
ரூ.27.7 லட்சத்திற்கு அடாஸ் அம்த்துடன் ஹூண்டாய் டூஸான் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
டிசம்பர் 3ல் வெளியாகும் ஜிவி பிரகாஷின் பேச்சுலர் படம்... ட்ரெயிலர் வெளியீடு
சென்னை : நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள படம் பேச்சுலர்.
நீண்ட நாட்களாக ரிலீசுக்காக காத்திருந்த இந்தப் படம் டிசம்பர் 3ல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கனவு நிறைவேறியது...நீண்ட காலம் காத்திருந்து சுசீலாவை சந்தித்த விக்ரம்
இந்நிலையில் படத்தின் ட்ரெயிலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

நடிகர் ஜிவி பிரகாஷ்
நடிகர் ஜிவி பிரகாஷ், இசையமைப்பாளராக தனது கேரியரை சினிமாவில் துவங்கி சிறப்பான பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதையடுத்து தன்னை நடிகராகவும் வெளிப்படுத்தி சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். துவக்கத்தில் சாதாரண படங்களில் நடித்துவந்த இவர், தற்போது தன்னுடைய கதைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

ரிலீசுக்கு தயார்
மேலும் தன்னுடைய படங்களுக்கு மட்டுமின்றி மற்ற நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இந்நிலையில இவரது நடிப்பில் உருவாகியுள்ள பேச்சுலர் படம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. கொரோனா உள்ளிட்ட காரணங்களால் இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது.

டிசம்பர் 3ல் ரிலீஸ்
இந்நிலையில் வரும் டிசம்பர் 3ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் ஜிவி பிரகாஷிற்கு ஜோடியாகியுள்ளார் திவ்ய பாரதி. இந்தப் படம் இளைஞர்களுக்கான படம் என்பதை படத்தின் இயக்குநர் மறுத்துள்ளார். குடும்பத்தினர் அனைவரும் பார்க்கும்வகையில் இந்தப் படம் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

ட்ரெயிலர் வெளியீடு
இந்நிலையில் படத்தின் ட்ரெயிலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இதில் ஜிவி பிரகாஷ் மிகவும் அழகாக காணப்படுகிறார். முன்னதாக வெளியிடப்பட்ட டீசரில் அவர் லுங்கி சகிதம் காணப்பட்ட நிலையில், இந்த ட்ரெயிலரில் ஐடி நிறுவனத்தில் வேலை செய்பவராக காணப்படுகிறார்.

திரையரங்குகளில் ரிலீஸ்
படமும் ஐடி நிறுவனத்தில் வேலை செய்பவரையும் அவரது காதலையும் மையமாக கொண்டு வெளியாகவுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக ஜிவி பிரகாஷின் ஜெயில் படம் டிசம்பர் 9ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்தப் படமும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில், படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் வசந்தபாலன்.

அடுத்தடுத்த படங்கள்
இந்தப் படங்களை தொடர்ந்து ஜிவி பிரகாஷின் ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, 4ஜி, இடிமுழக்கம் ஆகிய படங்களும் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. மேலும் மற்ற நடிகர்களின் வாடிவாசல், மாறன் உள்ளிட்ட படங்களிலும் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.