Don't Miss!
- Automobiles
காரில் நம்பர் பிளேட்டிற்கு பதிலாக ஜாதி பெயருடன் வலம் வந்த இளைஞர்! போலீசார் போட்ட ஹெவியான அபராதம்!
- News
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- தேமுதிக இன்று ஆலோசனை- 16 பேர் தமாகா தேர்தல் பணிக்குழு அறிவிப்பு!
- Finance
அமெரிக்கா செல்ல திட்டமிடுவோருக்கு நல்ல விஷயம்.. விசா நடைமுறையில் தளர்வுகளா?
- Sports
"ஒரே ஒரு குறைதான்.. சரி செய்தால் நம்.1 பவுலர் ஆகலாம்".. உம்ரானுக்கு முகமது ஷமி முக்கிய அட்வைஸ்!
- Lifestyle
Today Rasi Palan 23 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் பண பிரச்சனை நீங்கிடும்...
- Technology
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
லோகேஷ் கனகராஜ் வெளியிடும் பேச்சிலர் படத்தின் ட்ரெயிலர்
சென்னை : நடிகர் ஜிவி பிரகாஷ்குமாரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் பேச்சிலர்.
இந்தப் படம் வரும் டிசம்பர் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முகம் தெரியாத மனிதர்களின் பாராட்டு... பொன் மாணிக்கவேல் குறித்து நெகிழ்ந்த பிரபுதேவா
இந்நிலையில் படத்தின் ட்ரெயிலரை இன்று மாலை படக்குழுவினர் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

நடிகர் ஜிவி பிரகாஷ்
நடிகர் ஜிவி பிரகாஷ்குமார் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. அவரது நடிப்பில் நீண்ட காலங்களாக ரிலீசுக்காக காத்திருந்த படம் பேச்சிலர். இந்தப் படம் வரும் டிசம்பர் 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பேச்சிலர் படம்
படத்தில் திவ்ய பாரதி ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாகியுள்ளார். இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், படம் இளைஞர்களுக்கான படமாக அமைந்துள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்தப் படம் குடும்பத்தினர் அனைவரும் பார்க்கும் வகையில் அமைந்துள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

குடும்பங்களுக்கான படம்
படத்தில் சர்ச்சைக்குரிய எந்த காட்சிகளும் இடம்பெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். பெங்களூரு ஐடி நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லும் இளைஞன் எதிர்கொள்ளும் சம்பவங்களை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சதீஸ் செல்வகுமார் இயக்கம்
சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் உதவி இயக்குநர் சதீஸ் செல்வகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் இயக்குநர் மிஷ்கினும் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். படத்தை ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி சார்பில் டில்லி பாபு தயாரித்துள்ளார். படத்தில் நாயகனாக நடித்துள்ளதுடன் இசையமைப்பையும் மேற்கொண்டுள்ளார் ஜிவி பிரகாஷ்குமார்.

3ம் தேதி ரிலீஸ்
வரும் 3ம் தேதி படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில், படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தின் டீசர் வெளியான நிலையில் தற்போது படத்தின் ட்ரெயிலர் இன்று மாலை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த ட்ரெயிலரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிடவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

9ம் தேதி ஜெயில் படம் ரிலீஸ்
இந்தப் படத்தை தொடர்ந்து வரும் 9ம் தேதி வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள ஜெயில் படமும் ரிலீசாக உள்ளது. அடுத்தடுத்து ஒரு வார இடைவெளியில் அவரது படங்கள் ரிலீசாக உள்ளது குறித்து ஜிவி பிரகாஷின் ரசிகர்கள் உற்சாகம் தெரிவித்துள்ளனர்.