»   »  கொம்பு வச்ச சிங்கமடா.. சீறும் ஜி.வி.பிரகாஷ்.. உயிர் விடும் விவசாயிகளுக்கும் உதவுகிறார்!

கொம்பு வச்ச சிங்கமடா.. சீறும் ஜி.வி.பிரகாஷ்.. உயிர் விடும் விவசாயிகளுக்கும் உதவுகிறார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கொம்புவச்ச சிங்கம்டா பாடல் மூலம் கிடைக்கும் வருவாய் கஷ்டப்படும் விவசாய குடும்பங்களுக்கு அளிக்கப்படும் என இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மழை பொய்த்துவிட்டதால் தமிழகத்தில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளோ கருகும் பயிர்களை பார்த்து பார்த்து கண்ணீர் சிந்துகிறார்கள்.

கஷ்டப்பட்டு கடன் வாங்கி நடவு செய்த பிறகு பயிர்கள் கருகுவதை பார்க்கும் விவசாயிகள் மாரடைப்பால் மரணம் அடைகிறார்கள். சிலர் கஷ்டத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கின்றனர்.

விவசாயிகள்

விவசாயிகள்

தினமும் டிவியிலும், செய்தித்தாள்களிலும் விவசாயிகள் மரண செய்தி தவறாமல் வருகிறது. அவர்களை இழந்து கதறும் குடும்பத்தாரை பார்க்கும்போது நம் மனம் பதறுகிறது.

ஜி.வி. பிரகாஷ்

தினம் தினம் விவசாயிகள் பரிதாபமாக உயிர் இழந்து வரும் நிலையில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் தமிழக விவசாயிகளை காக்குமாறு ஃபேஸ்புக்கில் குரல் கொடுத்துள்ளார்.

ஜல்லிக்கட்டு பாடல்

ஜல்லிக்கட்டு பாடல்

ஜி.வி. பிரகாஷ் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து பாடல் ஒன்றை வெளியிடுகிறார். கொம்புவச்ச சிங்கம்டா என்ற அந்த பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார்.

பணம்

கொம்புவச்ச சிங்கம்டா பாடல் மூலம் கிடைக்கும் பணம் அனைத்தும் கஷ்டப்படும் விவசாயிகளின் குடும்பங்களுகுக்கு அளிக்கப்படும். எங்களால் முடிந்ததை செய்கிறோம் என ஜி.வி. பிரகாஷ் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

English summary
Music composer cum actor GV Prakash has decided to give the revenue of his Jallikattu song to struggling farmer families.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos