twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'விவசாயி நம் உயிர்... தேக்கி வைத்த நான்கெழுத்து கடவுள்!' - ஜி.வி. பிரகாஷ் உருக்கம்!

    By Shankar
    |

    சென்னை: டெல்லியில் நவம்பர் 20ம் தேதி தொடங்க உள்ள நாடு தழுவிய விவசாயிகள் போராட்டத்திற்கு இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து ட்விட்டரில் மூன்று தனித்தனி ட்வீட்டுகள் செய்துள்ளார். முதலாவது ட்வீட்டில் 'Indebted2Farmers', 'KisanMuktiSansad', 'November 20th Dill Chalo' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.அதாவது, நாம் விவசாயிகளுக்கு கடன் பட்டுள்ளோம். விவசாயிகளுக்கான பாராளுமன்றம் தேவை, நவம்பர் 20ம் தேதி டெல்லி செல்வோம் என்று ட்வீட் செய்துள்ளார்.

    GV Prakash supports farmers Delhi protest

    அடுத்ததாக, "நம் நாட்டில் ஏழ்மையில் வாழும் பலகோடி விவசாயிகளுக்கு கடன்பட்டுள்ளோம்," என்று தமிழிலும் ஜிவி பிரகாஷ் ட்வீட் செய்துள்ளார்.

    மேலும் இன்னொரு ட்வீட்டில், "விவசாயி நம் உயிர். தேக்கி வைத்த நான்கெழுத்து கடவுள். எவர் அடி தொழுதேணும் அவர் துயர் துடைப்போம்," என்று மிகவும் உருக்கமாக கூறியுள்ளார்.

    ஜிவி பிரகாஷின் இந்த மூன்று ட்வீட்டுகளையும் ஆயிரக்கணக்கில் ஷேர் செய்தும், லைக் செய்தும் வருகிறார்கள். அவருடன் இளைய தலைமுறையினரும், விவசாயிகளுக்காக குரல் கொடுக்க முன் வந்துள்ளனர்.

    கமல் ஹாசன், ரோகிணி, கிஷோரைத் தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ் என தமிழ்த் திரையுலகினர் ஆதரவு தெரிவித்து வருவது மிகவும் வரவேற்கத் தக்கது. அஜீத், விஜய், சூர்யா, தனுஷ், விஷால் உள்ளிட்ட மற்ற நட்சத்திரங்களும் விவசாயிகளுக்காக களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உச்ச நட்சத்திரமான ரஜினியின் ஆதரவும் விவசாயிகளுக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் இருக்கிறது.

    #Indebted2Farmers #KisanKiLoot # KisanMuktiSansad என்ற ஹேஷ்டேக்குகள் சமூகத் தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    English summary
    GV Prakash is extending his support to farmers Delhi protest
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X