»   »  ரஜினி அமைதியாக இருக்கும்போது துணிந்து குரல் கொடுக்கும் ஜி.வி. பிரகாஷ் #bansterlite

ரஜினி அமைதியாக இருக்கும்போது துணிந்து குரல் கொடுக்கும் ஜி.வி. பிரகாஷ் #bansterlite

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த போராட்டம் பெரிய அளவில் நடந்து வருகிறது. நேற்று மாபெரும் கண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அரசியல் தலைவர்களின் ஆதரவு தேவையில்லை இது எங்களின் போராட்டம் என்று இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஜினி

ரஜினி

ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு உலக நாயகன் கமல் ஹாஸன் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் இதுவரை இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

ஆதரவு

நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் தொடர்ந்து மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை ஆதரித்துள்ளார்.

ட்வீட்

நடந்து முடிந்த பின்னால் எதையும் தடுக்க முடியாது என்பதை உணர மறுத்தால் "விபரீத" விளைவுகளுக்கு யார் பொறுப்பு..?

மக்களே அரசு மக்களுக்காகவே அரசு #bansterlite என ட்வீட்டியுள்ளார் ஜி.வி. பிரகாஷ்.

சிறுமியர்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் சிறுவர், சிறுமியர் கூட ஆர்வத்துடன் கலந்து கொண்டு கோஷமிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மெரினா

மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார் ஜி.வி. பிரகாஷ். இந்நிலையில் அவர் தூதுக்குடிக்கே சென்று இளைஞர்களுடன் சேர்ந்து போராடினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

English summary
Actor cum music director GV Prakash has supported the protest going on in Tuticorin against Sterlite factory. Like Marina protest, youngsters are protesting in large number in Tuticorin.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X