»   »  தனுஷை பிரிந்த பிறகே ஹீரோ ஆனேன் என் சிப்சு: ட்வீட்டிய ஜி.வி. பிரகாஷ்

தனுஷை பிரிந்த பிறகே ஹீரோ ஆனேன் என் சிப்சு: ட்வீட்டிய ஜி.வி. பிரகாஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷை பிரிந்த பிறகே தான் ஹீரோ ஆனதாக இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரும், தனுஷும் ப்ரோ, ப்ரோ என்று கூறி நெருக்கமாக இருந்தார்கள். தனுஷின் ஆடுகளம் மற்றும் மயக்கம் என்ன படங்களுக்கு இசையமைத்தவர் ஜி.வி.

GV Prakash talks about rift with Dhanush

அதன் பிறகு தனுஷுக்கும், ஜி.வி.க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனுஷ்-வெற்றிமாறனின் படத்தில் இருந்து வெளியேறினார்.

இது குறித்து தனுஷும், ஜி.வி.யும் வெளியே பேசாமல் இருந்தனர். இந்நிலையில் ஜி.வி. தனுஷுடனான பிரச்சனை குறித்து ட்விட்டரில் பேசியுள்ளார். தனுஷை பிரிந்த பிறகு ஜி.வி. பிரகாஷுக்கு நேரம் சரியில்லை என ஒருவர் ட்வீட்டியிருந்தார்.

அதை பார்த்த ஜி.வி. ட்விட்டரில் கூறியதாவது,

GV Prakash talks about rift with Dhanush

டேய் லூசு அதுக்கப்புறம்தான்டா என் சம்பளம் டபுள் ஆச்சு. மேலும் ஹீரோ ஆனேன் என் சிப்சு என்றார்.

பிறகு என்ன நினைத்தாரோ அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார் ஜி.வி.

English summary
Musician cum actor GV Prakash has talked about his rift with multi talented Dhanush.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil