»   »  எம்.ராஜேஷின் அடுத்த ஹீரோ ஜி.வி.பிரகாஷ்?

எம்.ராஜேஷின் அடுத்த ஹீரோ ஜி.வி.பிரகாஷ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் ராஜேஷின் அடுத்த படத்தில் நாயகனாக, ஜி.வி.பிரகாஷ் நடிக்கவிருக்கிறார் என்று உறுதியான செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்கள் வரிசையாக ஹிட்டடித்ததில் கோலிவுட்டின் ஹாட்ரிக் இயக்குனராக ராஜேஷ் வலம்வந்தார்.


GV Prakash Team Up with M Rajesh

ஆனால் இவர் கடைசியாக இயக்கிய அழகுராஜா மற்றும் வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க 2 படங்களும் தோல்வியைத் தழுவி ராஜேஷின் ஹாட்ரிக் இமேஜை காலி செய்தது.


இந்நிலையில் மீண்டும் ஒரு வெற்றிப் படம் பண்ண வேண்டும் என்ற முனைப்பில் அடுத்த படத்திற்காக தயாராகி வருகிறார் ராஜேஷ். இவரின் அடுத்த ஹீரோ வளர்ந்து வரும் நாயகர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ்.


தற்போது புரூஸ்லீ படத்தில் நடித்துவரும் ஜி.வி.பிரகாஷ் ராஜேஷின் படத்தில் நடிப்பதை உறுதி செய்திருக்கிறார். மேலும் அவர் கூறும்போது "அடுத்த வருடம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும், ராஜேஷின் முந்தைய படங்களைப் போலவே இந்தப் படமும் காமெடியாக இருக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.


தெலுங்கில் நானி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பலே பலே மகாதேவோ படத்தின் தமிழ் ரீமேக்கிலும் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவிருக்கிறார். 2 படங்களில் முன்னதாக எந்தப் படத்தில் அவர் நடிக்கப் போகிறார் என்பது குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

English summary
G.V.Prakash Now Busy in Bruce Lee Shooting, Next He is Team Up with Director M.Rajesh. Sources Said The Official Announcement will be Released Soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil