»   »  கெட்ட பய சார் இந்த கார்த்தி.. பாட்ஷா என்கிற ஆன்டனி... - எல்லாம் தலைப்புகள்தான்!

கெட்ட பய சார் இந்த கார்த்தி.. பாட்ஷா என்கிற ஆன்டனி... - எல்லாம் தலைப்புகள்தான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜிவி பிரகாஷ் தான் நடிக்கும் படங்களின் தலைப்புகளே திரும்பிப் பார்க்கும்படி இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் போலிருக்கிறது.

முதல் படம் டார்லிங். தலைப்பு இவருக்காக வைக்கப்பட்டதல்ல. தானாக அமைந்தது.

ஆனால் உண்மையிலேயே இவரது முதல் படமான பென்சில் தலைப்பு இவருக்காகவே வைக்கப்பட்டதுதான்.

த்ரிஷா இல்லனா நயன்தாரா

த்ரிஷா இல்லனா நயன்தாரா

அடுத்த படத் தலைப்பு த்ரிஷா இல்லனா நயன்தாரா. இந்தத் தலைப்புக்காக த்ரிஷா, நயன்தாரா இருவரிடமும் அனுமதி பெற்றார் ஜிவி. அவரே நேரில் வந்து கேட்டதால் தாராளமாக விட்டுக் கொடுத்தனர்.

கெட்ட பய சார் இந்த கார்த்தி

கெட்ட பய சார் இந்த கார்த்தி

இப்போது ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்துக்கு கெட்ட பய சார் இந்த கார்த்தி என்று தலைப்பு வைத்துள்ளனர். இது முள்ளும் மலரும் படத்தில் ரஜினி பேசும் கெட்ட பய சார் இந்த காளி என்ற வசனம். பெயரை மற்றும் மாற்றிக் கொண்டனர்.

பாட்ஷா இல்ல ஆன்டனி

பாட்ஷா இல்ல ஆன்டனி

அதற்கடுத்த படத்துக்கு பாட்ஷா இல்ல ஆன்டனி என்று தலைப்பிட்டுள்ளனர். இது பாட்ஷா படத்தில் ரஜினி பேசும் வசனம்தான். ஒண்ணு இந்த பாட்ஷா இருக்கணும்.. இல்ல ஆன்டனி இருக்கணும் என்று வரும் அந்த வசனம்.

நல்ல டெக்னிக்

நல்ல டெக்னிக்

ஒரிஜினல் வசனங்களை திருடிவிட்டார்கள் என்று கேஸும் போட முடியாது. அதே நேரம் ரசிகர்களை ஈர்த்த மாதிரியும் இருக்கும் என்பதால் தலைப்பை இப்படி யோசிக்கிறார்கள் போலிருக்கிறது. எப்படியோ.. நல்ல உத்திதான்!

English summary
GV Prakash Kumar's next two movies have titled as Ketta Paya Sir Intha Karthi and Badshah Illa antony.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil