»   »  அடுத்த வருஷம் விஜய் சேதுபதியை மிஞ்சுவார் ஜிவி பிரகாஷ்! - இயக்குநர் பாண்டிராஜ்

அடுத்த வருஷம் விஜய் சேதுபதியை மிஞ்சுவார் ஜிவி பிரகாஷ்! - இயக்குநர் பாண்டிராஜ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த ஆண்டு வெள்ளிக்கிழமை ஹீரோ என்று பெயரெடுத்துவிட்டார் விஜய் சேதுபதி. வரும் டிசம்பரில் வெளியாகும் கவண் படத்தையும் சேர்த்தால் இந்த ஆண்டு மொத்தம் 7 படங்களில் நடித்துவிட்டார் விஜய் சேதுபதி. 2017-ம் ஆண்டில் அதிகப் படங்களில் நடித்த ஹீரோ அவர்தான்.

ஆனால் அடுத்த ஆண்டும் இது தொடருமா என்றால்... தொடராது என்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.

GV Prakash will replace Vijay Sethupathy in 2017, says Pandiraj

"இந்தவருடம் எப்படி விஜய் சேதுபதி அதிகப் படங்களில் நடித்துள்ளாரோ அதுபோல அடுத்த வருடம் ஜி.வி. பிரகாஷ் நடித்த ஏராளமான படங்கள் வெளியாகும்," என்கிறார்.

புரூஸ் லீ - ஜி.வி. பிரகாஷின் புதிய படம். பிரசாந்த் இயக்கத்தில் ஜி.வி, கீர்த்தி கர்பண்டா போன்றோர் நடித்துள்ளார்கள்.

அண்மையில் நடந்த இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாண்டிராஜ் பேசுகையில், "என்னிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பிரசாந்த் இந்தப் படத்தின் இயக்குநராகியிருக்கிறார். மிக்க சந்தோஷம். இப்போது ஜி.வி.பிரகாஷ் அதிகப் படங்களில் நடிக்கிறார். ஒவ்வொரு படத்திலும் தன்னை நன்கு நிரூபித்துவருகிறார்.

GV Prakash will replace Vijay Sethupathy in 2017, says Pandiraj

இந்த வருடம் விஜய் சேதுபதி அதிக படங்களில் நடித்துள்ளார். எனவே அடுத்த ஆண்டு அதிகப் படங்களில் நடித்து ஜி.வி. பிரகாஷ் முதலிடம் பிடிப்பார்," என்றார்.

பத்து நாள் தொடர்ந்தாற்போல கால்ஷீட் இருந்தால் ஒரு புதுப்படம் கமிட் ஆகிக் கொண்டிருக்கிறார். விஜய் சேதுபதி... பாண்டிராஜ் கணிப்பு பலிக்குமா பார்க்கலாம்!

English summary
Director Pandiraj predicted that GV Prakash would be replaced Vijay Sethupathy in 2017, in number of movies release.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil