GV பிரகாஷ் குமார் சைந்தவி விவாகரத்து வழக்கு.. தீர்ப்புத் தேதியை அறிவித்த நீதிமன்றம்.. ரசிகர்கள் ஷாக்!
சென்னை: இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் பாடகி சைந்தவி ஆகியோரின் விவாகரத்து வழக்கில், வரும் அக்டோபர் 30ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தம்பதியினர் கடந்த ஆண்டு அதாவது 2024ஆம் ஆண்டு மே மாதம் தங்களின் பிரிவை அறிவித்திருந்தனர்.
திருமணமாகி 11 ஆண்டுகள் ஆன நிலையில், பரஸ்பர சம்மதத்துடன் இந்த முடிவை எடுத்ததாக இருவரும் தெரிவித்திருந்தனர். முதலில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி. பிரகாஷ், பின்னர் நடிகராகவும் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். அவர் இசையமைத்த பாடல்கள் பரவலான பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
'டார்லிங்', 'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' போன்ற படங்களில் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடித்ததோடு, இப்போதும் தொடர்ந்து படங்களில் நடித்தும் இசையமைத்தும் வருகிறார். கடந்த 2024ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி, தனது மனைவி சைந்தவியைப் பிரிவதாக அவர் எக்ஸ் தளத்தில் அறிவித்தார். அதேபோல, சைந்தவியும் ஜி.வி. பிரகாஷைப் பிரிவதாக அறிவித்திருந்தார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி தம்பதியினர், "நாங்கள் விவாகரத்து செய்கிறோம். 11 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு, நன்கு யோசித்து இந்த முடிவை எடுத்துள்ளோம்" என்று குறிப்பிட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து, அவர்கள் விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தை நாடினர். இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமண வாழ்க்கை: ஜி.வி. பிரகாஷ் குமார் கடந்த 2013ஆம் ஆண்டு தனது காதலியான சைந்தவியை திருமணம் செய்தார். வயலின் கலைஞரான சைந்தவியின் குடும்பத்தின் சம்மதத்துடன், இரு குடும்பத்தினரின் முழு ஒப்புதலோடு திருமணம் சிறப்பாக நடைபெற்றது. பள்ளிப் பருவத்திலிருந்தே இருவரும் காதலித்து வந்தனர்.

விவாகரத்துக்குப் பின்: ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த பல பாடல்களை சைந்தவி பாடியுள்ளார். குறிப்பாக, 'அசுரன்' படத்தில் இடம்பெற்ற "எள்ளுவாய்ப் பூக்கலையே", 'மயக்கம் என்ன' படத்தில் இடம்பெற்ற "பிறை தேடும் இரவிலே", சூரறைப் போற்று படத்தில் "கையிலே ஆகாசம்" போன்ற பல ஹிட் பாடல்கள் அவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தன. இவர்களின் விவாகரத்து அறிவிக்குப் பின்னரும் கூட இருவரும் இணைந்து இசை நிகழ்ச்சிகளில் பாடல்கள் பாடினார்கள். இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த அளவுக்கு புரிதலுடன் இருக்கும் இவர்கள் இருவருமா விவாகரத்து செய்து கொள்கிறார்கள் என்று எல்லாம் கேள்வி எழுப்பினர்.
தீர்ப்பு: இன்னும் சொல்லப்போனால் இவர்கள் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என்று வேண்டுதல் எல்லாம் நடந்தது.இந்நிலையில் இவர்களின் விவாகரத்து வழக்கை விசாரித்த குடும்பநல நீதிமன்றம், வரும் அக்டோபர் மாதம் 30ஆம் தேதி தீர்ப்பை அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











