இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த விக்ரம்.. கமலுக்காக காத்திருக்கும் இயக்குநர்கள்.. இவரும் இருக்காரா?

சென்னை: கடைசியாக வெளியான விஸ்வரூபம் 2 படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி பக்கம் ஒதுங்கி விட்டார் கமல் என கிண்டல் செய்தனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படம் 4 ஆண்டுகளுக்கு பிறகு வந்தாலும், கமல் எப்போதுமே நாயகன் தான் என்பதை நிரூபித்தது.

இந்தியா மட்டுமின்றி ஓவர்சீஸிலும் இத்தனை பெரிய வசூல் வேட்டையை யாரும் எதிர்பார்க்கவில்லை. சுமார் 600 கோடி வரை படம் பிசினஸ் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

600 கோடி பிசினஸ்

600 கோடி பிசினஸ்

லோகேஷ் கனகராஜ் தனது குருநாதருக்கான தரமான சம்பவத்தை விக்ரம் படத்தின் மூலம் செய்து அசத்தி விட்டார். 450 கோடி ரூபாய் வரை பாக்ஸ் ஆபிஸ் வசூல் ஈட்டிய விக்ரம் திரைப்படம். ஓடிடி ரிலீஸ், மியூசிக் ரைட்ஸ் என சுமார் 700 கோடி வரை பிசினஸ் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாகத்தான் ஒட்டுமொத்த இயக்குநர்களின் பார்வையும் கமல் மீது பாய்ந்திருக்கிறது.

முதலில் இந்தியன் 2

முதலில் இந்தியன் 2

விக்ரம் படத்திற்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்டு இப்படியொரு வசூல் வேட்டையை செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 பாதியிலேயே கிடப்பில் போடப்பட்ட நிலையில், விக்ரம் வெற்றி அந்த படத்தை மீண்டும் புத்துயிர் கொடுத்து எழுப்பி இருக்கிறது. காஜல் அகர்வாலுக்கு பதில் தீபிகா படுகோன் உள்ளிட்ட பாலிவுட் நடிகைகளின் பெயரே பரிசீலனை செய்யப்படும் அளவுக்கு இந்தியன் 2 படத்தை விரைவில் தொடங்கும் பணிகள் ஆரம்பித்துள்ளன. அந்த படம் எவ்வளவு விரைவாக வெளியாகிறதோ, அந்த அளவுக்கு 1000 கோடி வசூலை ஈட்டும் என பலரும் கணித்துள்ளனர்.

மாலிக் பட இயக்குநர்

மாலிக் பட இயக்குநர்

பகத் ஃபாசிலின் மலையாள படமான மாலிக் படத்தை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்கத்தில் அடுத்ததாக கமல் நடிக்கப் போவதாக அவரே அறிவித்தது குறிப்பிடத்தக்கது. கமலுடன் இணைந்து மம்மூட்டி உள்ளிட்ட முன்னணி நடிகரையும் அந்த படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறுகின்றனர்.

தேவர்மகன் 2

தேவர்மகன் 2

கமல்ஹாசன், சூர்யா, விஜய்சேதுபதி நடிப்பில் தேவர்மகன் 2 திரைப்படமும் உருவாகும் என்றும் நீண்ட நாட்களாக பேச்சுக்கள் உலா வருகின்றன. இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்திலும் கமல் நடிக்க முடிவெடுத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், இன்னொரு பிரபல இயக்குநரும் கமல் படத்தை இயக்கப் போவதாக சூப்பர் அப்டேட்கள் கிடைத்துள்ளன.

ஹெச் வினோத்தும் லிஸ்ட்டில்

ஹெச் வினோத்தும் லிஸ்ட்டில்

இந்த லிஸ்ட்டில் அடுத்ததாக வலிமை, ஏகே 61 படங்களின் இயக்குநர் ஹெச். வினோத்தும் தற்போது இணைந்துள்ளார். சமீபத்தில் கமலை பார்த்து பக்காவான அரசியல் கதை ஒன்றை சொல்லி விட்டு வந்திருப்பதாகவும், அவருக்கும் கதை பிடித்துப் போக பண்ணலாம் என்று பச்சைக் கொடி காட்டி வெயிட்டிங்கில் வைத்திருப்பதாக கூறுகின்றனர்.

மீண்டும் லோகேஷ் கனகராஜ்

மீண்டும் லோகேஷ் கனகராஜ்

விக்ரம் படத்தின் இறுதியிலேயே விக்ரம் 3 படத்துக்கு லோகேஷ் கனகராஜ் லீடு கொடுத்துள்ள நிலையில், ஹெச். வினோத் படத்தை முடித்து விட்டு மீண்டும் விக்ரம் 3க்காக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவின் மேலும், சில இயக்குநர்களும் கமலுக்கு கதை சொல்ல முயற்சி செய்து வருகிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X