Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
ஏகே 61 டீமுக்கு கண்டிப்பான உத்தரவு போட்ட ஹெச்.வினோத்...அப்படி என்ன உத்தரவு ?
சென்னை : அஜித் நடித்து வரும் ஏகே 61 டீமில் இருப்பவர்களுக்கு மிக கண்டிப்பான உத்தரவை போட்டுள்ளாராம் டைரக்டர் ஹெச்.வினோத். ஏற்கனவே தயாரிப்பாளர் போனி கபூர் போட்ட கண்டிஷனின் பின் விளைவு தான் தற்போது வினோத் போட்டுள்ள கண்டிஷன் என கூறப்படுகிறது.
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து ஏகே 61 படத்தில் மூன்றாவது முறையாக அஜித் - ஹெச்.வினோத் - போனி கபூர் ஒன்றிணைந்துள்ளது. வலிமை படம் தந்த பிரம்மாண்ட வெற்றி, பிரம்மாண்ட வசூல் சாதனை ஆகியவற்றால் உற்சாகமாக, புது எனர்ஜியுடன் ஏகே 61 படத்தின் ஷுட்டிங்கை துவக்கி உள்ளனர்.
“AK
61“
பல
கெட்டப்புகளில்
கலக்கப்போகும்
அஜித்...
சுவாரஸ்யத்தகவல்
!

வினோத்தின் மாஸ்டர் பிளான்
அதே சமயம் வலிமை படத்திற்கு கிடைத்த நெகடிவ் கமெண்ட்களை அடித்து நொறுக்க மிக கவனமாக திரைக்கதையை அமைத்து, படத்தின் வேலைகளை துவக்கி இருக்கிறாராம் வினோத். பேங்க் கொள்ளையை மையமாகக் கொண்ட இந்த படத்தில் ஹீரோ - வில்லன் என அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித் நெகடிவ் ரோலில் நடிக்கிறார். அஜித்திற்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.

போனி கபூர் போட்ட கண்டிஷன்
ஏகே 61 படத்தின் ஷுட்டிங் ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள, சென்னை மவுண்ட் ரோடு போன்ற பிரம்மாண்ட செட்டில் சமீபத்தில் துவங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை ஜுன் மாதத்திற்கு முன்பாக முடிக்க வேண்டும். தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும். வலிமை படத்தை போல் ரசிகர்களை அப்டேட் கேட்டு காத்திருக்க வைக்கக் கூடாது என போனி கபூர் கண்டிப்பாக சொல்லி விட்டாராம். அதனால் தான் சத்தமே இல்லாமல் படத்தின் வேலைகளை வேகமாக பார்த்து வருகிறார்களாம்.

ஏகே 61 ஷுட்டிங்கில் என்ன நடக்குது
லேட்டஸ்ட் தகவலின் படி, முதல் கட்டமாக அஜித் நடிக்கும் பேங்க் சேசிங் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறதாம். தற்போது முழுக்க முழுக்க அஜித் மட்டும் நடிக்கும் காட்சிகளில் கவனம் செலுத்தி, எடுத்து வருகிறார்களாம். மற்ற நடிகர் - நடிகைகள் உடனான காட்சிகள், அஜித் அவர்களுடன் பேசும் காட்சிகள் ஆகியன இன்னும் சில வாரங்களில் துவங்கப்பட உள்ளதாம்.

டீமுக்கு வினோத் போட்ட உத்தரவு
ஏகே 61 ஷுட்டிங் செட்டில் யாரும், எந்த காரணத்திற்காகவும் மொபைல் போன் பயன்படுத்த கூடாது என கண்டிப்பாக உத்தரவு போட்டுள்ளாராம் டைரக்டர். இது வழக்கமாக எல்லா டைரக்டர்களும் செய்வது தான் என்றாலும், சமீபத்தில் பீஸ்ட், பொன்னியின் செல்வன் ஷுட்டிங்கின் போது சில முக்கியமான சீன்களின் ஷுட்டிங் போட்டோக்கள் கசிந்ததை போல் அஜித் படத்தில் அப்படி நடக்கக் கூடாது. கடைசி வரை சன்பென்ஸ் வைத்திருக்க வேண்டும் என இந்த உத்தரவை கண்டிப்பாக கடைபிடித்து வருகிறாராம் வினோத்.