பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு தான் முதலில் பார்ப்பேன்... ஹெச் வினோத் இப்படி சொல்ல இதுதான் காரணமா?

சென்னை: அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அதேநாளில் விஜய்யின் வாரிசு திரைப்படமும் பொங்கல் ரேஸில் துணிவுக்கு எதிராக களமிறங்குகிறது.

வாரிசு, துணிவு படங்களில் முதலில் எதை பார்க்க வேண்டும் என ரசிகர்களிடம் பெரிய விவாதமே நடந்து வரும் நிலையில், இயக்குநர் ஹெச் வினோத் அதிரடியாக தனது விருப்பத்தை முன்வைத்துள்ளார்.

 அஜித்தின் துணிவு பொங்கல்

அஜித்தின் துணிவு பொங்கல்

கடந்த பிப்ரவரி மாதம் அஜித்தின் வலிமை திரையரங்குகளில் வெளியானது. ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதனைத் தொடர்ந்து தற்போது அஜித் - ஹெச் வினோத் கூட்டணியில் 'துணிவு' படம் உருவாகியுள்ளது. அஜித்துடன் மஞ்சுவாரியர், சமுத்திரக்னி, பிக் பாஸ் அமீர், பாவ்னி ஆகியோரும் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர். நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக அஜித்தும் ஹெச் வினோத்தும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.

 ஹெச் வினோத்தின் பொங்கல் ஆசை

ஹெச் வினோத்தின் பொங்கல் ஆசை

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என ஹெச் வினோத் இயக்கிய முதல் இரண்டு திரைப்படங்களும் சூப்பர் ஹிட் அடித்தன. ஆனால், நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகியவை பெரியளவில் எடுபடவில்லை. இதனால், துணிவு படத்தை கண்டிப்பாக ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முடிவில் தீயாக வேலை செய்துள்ளாராம் ஹெச் வினோத். முழுக்க முழுக்க அவரது ஆக்‌ஷன் ட்ரீட்டாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. பொங்கல் ரிலீஸில் விஜய்யின் வாரிசு திரைப்படமும் இணைந்துள்ளதால், ஹெச் வினோத் தனது வித்தியாசமான ஆசையை கூறியுள்ளார்.

 வாரிசு தான் ஃபர்ஸ்ட் சாய்ஸ்

வாரிசு தான் ஃபர்ஸ்ட் சாய்ஸ்

விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு இரண்டுமே பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி வெளியாகிறது. இதனால், இரண்டில் எந்தப் படத்தை முதலில் பார்க்க வேண்டும் என்பது ரசிகர்களிடம் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதுபற்றி பேசியுள்ள ஹெச் வினோத், நான் முதலில் வாரிசு படத்தை தான் பார்ப்பேன் என ஓப்பனாக கூறியுள்ளார். விஜய்யின் வாரிசு படத்தை பார்க்க துணிவு இயக்குநர் ஹெச் வினோத் ஆர்வமாக இருப்பது அஜித் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 இதுதான் காரணமாம்

இதுதான் காரணமாம்

சமீபத்தில் தான் விஜய்யை சந்தித்து ஹெச் வினோத் கதை ஒன்றை கூறியுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது வாரிசு படத்தை முதலில் பார்ப்பேன் என ஹெச் வினோத் கூறியுள்ளார். இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது அதுவும் தெரியவந்துள்ளது. போஸ்ட் புரொடக்‌ஷன், எடிட்டிங் என பல முறை துணிவு படத்தை ஏற்கனவே பார்த்துவிட்டதால், பொங்கல் ரிலீஸில் வாரிசை பார்க்கவுள்ளதாக ஹெச் வினோத் கூறியுள்ளாராம். ஹெச் வினோத்தின் இந்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X