»   »  மெகா பட்ஜெட் படத்தை கையை வைத்த 'ரான்சம்வேர் வைரஸ்': பணம் கொடுக்க மறுக்கும் தயாரிப்பாளர்

மெகா பட்ஜெட் படத்தை கையை வைத்த 'ரான்சம்வேர் வைரஸ்': பணம் கொடுக்க மறுக்கும் தயாரிப்பாளர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஹாலிவுட் படமான பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் 5 மாஸ்டர் காப்பியை ஹேக் செய்து பணம் கேட்கிறார்கள் ஹேக்கர்கள்.

ரான்சம்வேர் வைரஸ் பற்றி தான் உலகம் முழுவதும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஹேக்கர்கள் கம்ப்யூட்டரை ஹேக் செய்து பணம் கேட்டு மிரட்டி வருகிறார்கள்.

ரான்சம்வேர் வைரஸ் ஏற்கனவே இந்தியாவுக்குள் வந்து அண்டை மாநிலமான கேரளா வரை பரவிவிட்டது.

ஹாலிவுட்

ஹாலிவுட்

வால்ட் டிஸ்னியின் ஹாலிவுட் படமான பைரேட்ஸ் ஆப் தி கரீபியனின் 5ம் பாகத்தை ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ளனர். மேலும் பணம் கொடுக்காவிட்டால் படத்தை ஆன்லைனில் வெளியிடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

வால்ட் டிஸ்னி

வால்ட் டிஸ்னி

ஹேக்கர்களுக்கு பணம் கொடுக்க வால்ட் டிஸ்னி நிறுவனம் மறுத்துள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு வால்ட் டிஸ்னி நிறுவனம் எப்.பி.ஐ. அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளது.

பைரேட்ஸ்

பைரேட்ஸ்

ஜானி டெப் நடித்துள்ள பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் 5 படம் வரும் 25ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் ஹேக்கர்கள் டிஸ்னி சிஸ்டத்தை ஹேக் செய்து படத்தின் மாஸ்டர் காப்பியை எடுத்துள்ளனர்.

மிரட்டல்

மிரட்டல்

தாங்கள் கேட்ட பணத்தை கொடுக்காவிட்டால் படத்தின் முதல் 5 நிமிட காட்சிகள் ஆன்லைனில் வெளியிடப்படும், அப்படியும் பணம் தராவிட்டால் அடுத்த 10 நிமிட காட்சிகள் வெளியிடப்படும், பணம் தரும் வரை காட்சிகள் லீக் செய்யப்படும் என ஹேக்கர்கள் மிரட்டியுள்ளனர்.

English summary
Pirates of the Caribbean 5 is the latest victim of ransomware attack. Hackers threaten to leak the movie online unless their demands are met.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil