»   »  பாண்டிராஜின் ஹைக்கூ இப்போ "பசங்க 2"

பாண்டிராஜின் ஹைக்கூ இப்போ "பசங்க 2"

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூர்யா - அமலாபால் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கியுள்ள புதிய படம் ‘ஹைக்கூ'. சிறுவர்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தின் தலைப்பு சுத்தமான தமிழ் வார்த்தை இல்லை என்பதால் இப்படத்திற்கு வரிவிலக்கு கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டது.

இதையடுத்து, படத்தின் தலைப்பை மாற்ற படக்குழுவினர் முடிவு செய்தனர், இயக்குநர் பாண்டிராஜும் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்திற்கு நல்லொதொரு தலைப்பை ரசிகர்கள் பரிந்துரைக்கலாம் என்று கூறியிருந்தார்.

பாண்டிராஜின் இந்த அறிவிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் ட்விட்டரில் பதிலளித்து இருந்தனர், பலரும் குழந்தைகள் படமென்பதால் அதற்கு ஏற்றவாறே தலைப்புகளை பரிந்துரைத்து இருந்தனர்.

தொடர்ந்து ஆலோசனை செய்த படக்குழுவினர் புதிதாக ஒரு தலைப்பை தேர்ந்தெடுப்பதை விட, ஏற்கனவே பிரபலாமான ஒரு படத்தின் பெயரை வைக்கலாம் என்று முடிவு செய்து தற்போது பசங்க 2 என்று பெயர் வைத்திருக்கின்றனர். இந்தத் தலைப்பை இறுதி செய்த இயக்குநர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை அறிவித்து தலைப்பை உறுதி செய்திருக்கிறார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் முன்னதாக வெளிவந்த ‘பசங்க' படத்தைப் போன்று குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படம் எடுக்கப்படுவதால், இப்படத்திற்கு ‘பசங்க-2' என்று தலைப்பு வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்ற நோக்கத்தில் தற்போது இந்தத் தலைப்பை இறுதியாக தேர்வு செய்திருக்கிறார்கள்.

இந்த தலைப்புடன் தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளிவந்துள்ளன. இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் இப்படத்தின் ஆடியோவையும், டிரெய்லரையும் படக்குழுவினர் வெளியிடவிருக்கின்றனர்.

இப்படத்தில் அமலாபால் மட்டுமல்லாது பிந்து மாதவியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . சூர்யா தனது சொந்த நிறுவனமான 2D நிறுவனத்தின் மூலம் இப்படத்தைத் தயாரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

பசங்க 2 பசங்க ரெக்கார்டை முறியடிக்குமா என்று பார்க்கலாம்.....

    Read more about: haiku, ஹைக்கூ
    English summary
    Suriya's Haiku Movie Title Now Changed as Pasanga 2.
    Please Wait while comments are loading...

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil