Don't Miss!
- News
எங்கள் தரப்பில் வேட்பாளர் தயார்.. பாஜக நிலைப்பாட்டுக்கு காத்திருக்கிறோம்..ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி!
- Finance
இந்தியாவின் வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- Technology
BSNL சூப்பர் ரீசார்ஜ்: மாதம் ரூ.184 தான் செலவு 395 நாளுக்கு வேலிடிட்டி.! மாஸ் ஆன பிளான் இதான்.!
- Automobiles
ஃப்ரீனாலும் இந்த 5 ரயில்கள்ல மட்டும் போயிடாதீங்க... போனவங்க எல்லாம் கழுவி கழுவி ஊத்துறாங்க!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
50வது படம் மஹா...பத்தல பத்தல...வேற லெவலில் பிளான் போடும் ஹன்சிகா
சென்னை : நடிகை ஹன்சிகாவின் மஹா படம் கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் காத்திருப்பிற்கு பிறகு ஜுலை 22 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. யுஏ சான்று அளிக்கப்பட்டுள்ள மஹா படம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.டைரக்டர் யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா மோத்வானி, சிம்பு, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் மஹா. இந்த படத்தில் சிம்பு, 40 நிமிடங்கள் வரும் கேமிரோ ரோலில் நடித்துள்ளார்.
2018 ம் ஆண்டு மஹா படம் அறிவிக்கப்பட்டது. பல போராட்டங்களை கடந்து தற்போது தான் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. மஹா படத்திற்கு பிறகு ஹன்சிகா 10 படங்களில் கமிட்டாகி விட்டார். ஆனால் தற்போது தான் மஹா ரிலீசாக உள்ளது.
மஹா, தியேட்டரில் ரிலீசான ஒரு மாதத்தில் ஓடிடியிலும் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஓடிடி ரிலீஸ் பற்றிய எந்த அறிவிப்பும் இதுவரை முறையாக அறிவிக்கப்படவில்லை. படத்தின் ரிலீசை முன்னிட்டு பத்திரிக்கை ஒன்றிற்கு ஹன்சிகா பேட்டி அளித்துள்ளார்.
மாநாடு
சென்டிமென்ட்..
மீண்டும்
இணைந்த
சிம்பு
-
ஹன்சிகா
ஜோடி..
மாஸ்
காட்ட
காத்திருக்கும்
மஹா!

மஹா பட கதை இது தானா
அந்த பேட்டியில், மஹா படம் தாமதமாகி இருக்கலாம். அது தனக்கான அங்கீகாரத்தை பெறும் என நம்புகிறேன். இது ஒரு தாயின் போராட்டம் பற்றிய கதை. ஒரு தாய் தனது குழந்தைக்காக எவ்வளவு கஷ்டப்படுகிறாள் என்பது பற்றிய கதை. எனது முதல் துணிச்சலான கேரக்டர் படம். இதற்கு முன் இது போன்ற ஒரு அழுத்தமான, ஆவேசமான கேரக்டரில் இதுவரை நான் நடித்ததில்லை.

இதுனால தான் மஹா ஸ்பெஷல்
இது போன்ற ஒரு ரோலில் என்னை நான் பார்க்க ஆர்வமாக உள்ளேன்.சொல்லப்போனால் இந்த படத்தில் ஆரம்பத்தில் சாந்தமான தாயாக வந்து, பிறகு போல்டான பெண்ணாக மாறுவது தான் என்னுடைய கேரக்டர். மஹா சுற்றி தான் கதை முழுவதும். படம் நன்றாக வந்திருக்கிறது என நம்புகிறேன். மஹா எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ஏன்னா, இது என்னுடைய 50வது படம் என்பதற்காக மட்டுமல்ல, டைட்டில் ரோலில் நான் நடிக்க முதல் படமும், பெண்ணை மையமாகக் கொண்டு நான் நடித்துள்ள முதல் படமும் இது தான் என்றார்.

கடைசி மூச்சுள்ள வரை நடிக்கனும்
நான் 50 படங்கள் நடித்து விட்டதாக பலரும் மிகைப்படுத்தி சொல்கிறார்கள். ஆனால் இதை பெரிய விஷயமாகவோ, சாதனையாகவோ நான் பார்க்கவில்லை. தமிழ் சினிமா ஆரம்ப முதலே என்னை கை நீட்டி வரவேற்றதை லக்கியாக கருதுகிறேன். நான் நடிக்க வந்து 20 வருடங்கள் ஆக போகிறது. ஆனால் நான் நிறைய பண்ண வேண்டும் என நினைக்கிறேன். இப்போது தான் என பயணத்தை துவக்கி இருப்பதாக உணர்கிறேன். 100 படங்களை எட்ட வேண்டும் என நினைக்கிறேன். 50 என்பது மிக சிறிய நம்பர். இன்னும் நிறைய வர வேண்டும். எனது கடைசி மூச்சு உள்ள வரை நடிக்க வேண்டும் என நினைக்கிறேன் என்றார்.

மஹா எப்படி வித்தியாசமான படம்
பெண்ணை மையமாகக் கொண்ட படங்கள் தமிழில் நிறைய வந்து கொண்டிருக்கின்றன. 2020 ல் கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின், கடந்த மாதம் வந்த நயன்தாராவின் ஓ2. இதில் மஹா எந்த விதத்தில் வேறுபட்டது என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஹன்சிகா, இதுவரை ஹன்சிகாவை நீங்கள் ஆக்ரோசமான கேரக்டரில் பார்த்திருக்கீங்களா? ஹன்சிகா டான்ஸ் ஆடாத படத்தை இதுவரை பார்த்திருக்கீங்களா? நீங்கள் பார்த்திக்க முடியாது. இதனால் தான் மஹா தனித்துவமானது.

மஹாவிற்காக ஹன்சிகா செய்தது
எனக்கே நான் எடுத்துக் கொண்ட சவால் தான் மஹா படம். இந்த படத்திற்கு கதை கேட்கும் போதே, இதில் எப்படி நடிப்பேன் என கற்பனை செய்தேன். இந்த கேரக்டருக்காக எப்படி நான் என்னை தயார் செய்து கொள்ள வேண்டும் என்று தான் கதை கேட்டதும் நான் முதலில் யோசித்தது. ஒரு குழந்தைக்கு இப்படி நடந்தால் அம்மாவின் உணர்வு எப்படி இருக்கும் என என் அம்மாவிடம் கூட பல கேள்விகள் கேட்டு தெரிந்து கொண்டேன்.

எல்லா படத்திற்குமே இப்படி தானா
மஹா படம் நிச்சயம் என்னை நடிப்பில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். என்னுடைய அடுத்த படங்களும் கூட சோதனை முயற்சியாகவே நடிக்கிறேன். 105 மினிட்ஸ் படம் சிங்கிள் கேரக்டர், சிங்கிள் ஷாட் படம். இது என்னுடைய கஷ்டமான படங்களில் ஒன்று. இதுவரை இல்லாத அளவிற்கு இந்த படத்திற்காக 20 நாட்கள் ஒத்திகை பார்த்தேன். ஒவ்வொரு நடிகருக்கும் கனவாக இருக்கும் இரட்டை வேடத்தில் நான் மை 3 காமெடி வெப் சீரிசில் நடித்துள்ளேன்.
Recommended Video

கேரக்டராவே மாறி விடுகிறார்
பொதுவாக நான் ஸ்கிரிப்டை வீட்டிற்கு எடுத்து செல்ல மாட்டேன். ஆனால் இந்த ஸ்கிரிப்டை வீட்டிற்கு எடுத்துச் சென்று மனதளவில் என்னை தயார் செய்து கொண்டேன். என்னை அமைதிப்படுத்திக் கொள்ளவே எனக்கு நேரம் தேவைப்பட்டது. இது வெறும் ஆக்ஷன் காட்சிகள் மட்டுமல்ல மனதளவிலும் கஷ்டமான படம். என்னுடைய கேரக்டர்களை பற்றி மட்டும் தான் நான் யோசிக்கிறேனே தவிர கம்ஃபர்ட் ஜோனில் இருப்பது பற்றி அல்ல. சில நேரம் வீட்டிற்கு வந்த பிறகும் கூட அந்த கேரக்டர்கள் பற்றியே சிந்தித்து கொண்டிருக்கிறேன் என்றார் ஹன்சிகா.