»   »  அறிமுகப்படுத்திய இயக்குனருக்கே ஜோடியாகும் ஹன்சிகா

அறிமுகப்படுத்திய இயக்குனருக்கே ஜோடியாகும் ஹன்சிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹன்சிகா பிரபுதேவாவுடன் சேர்ந்து குலேபகாவலி படத்தில் நடிக்க உள்ளார்.

பிரபுதேவா தற்போது தொடர்ந்து நடிப்பிலும் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளார். பல காலம் கழித்து அவர் தமிழில் நடித்த தேவி படம் ஹிட்டானது. இந்நிலையில் அவர் கல்யாண் இயக்கத்தில் புதுப் படம் ஒன்றில் நடிக்கிறார்.

இது குறித்து ஹன்சிகா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

கணிப்பு?

மகிழ்ச்சியான செய்தி வெளியாக உள்ளது...ஏதாவது கணிப்பு?? என்று கூறி ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார் ஹன்சிகா.

குலேபகாவலி

என் முதல் தமிழ் படத்தின் இயக்குனர், என் கடைசி படத்தின் தயாரிப்பாளர் மற்றும் என் தற்போதைய படத்தின் ஹீரோ பிரபுதேவா...குலேபகாபலி.

ஹன்சிகா

ஹன்சிகா

ஹன்சிகாவுக்கு தற்போது மார்க்கெட் டல் அடித்துள்ளது. மலையாளத்தில் மோகன்லாலின் வில்லன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் சீனியரான பிரபுதேவாவுக்கு ஜோடியாகியுள்ளார்.

லட்சுமி மேனன்

லட்சுமி மேனன்

பிரவுதேவா நடித்து வரும் யங் மங் சங் படத்தில் அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்து வருகிறார். லட்சுமிக்கும் தற்போது கோலிவுட்டில் நிலைமை சரியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Hansika is sharing the screen space with her first Tamil movie's director Prabhu Deva in the upcoming movie Gulebagavali being directed by Kalyaan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil