Just In
- 5 hrs ago
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- 5 hrs ago
விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது !
- 7 hrs ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 8 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Automobiles
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நாங்க தயங்கினோம்... ஆனா சிம்புவை நடிக்க அழைச்சதே நடிகை ஹன்சிகாதான்... போட்டுடைத்த இயக்குனர்
சென்னை: சிம்புவை அந்த படத்தில் நடிக்க அழைத்ததே நடிகை ஹன்சிகாதான் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்.
நடிகை ஹன்சிகா இப்போது நடித்து வரும் படம், 'மஹா'. இது அவரது 50 வது படம்.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஜமீல் இயக்குகிறார்.

காவி உடை ஹன்சிகா
இவர், ரோமியோ ஜூலியட், போகன் படங்களில் இயக்குனர் லஷ்மணிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதில் காவி உடை அணிந்து ஹன்சிகா புகைப் பிடிப்பது போல் இருந்ததால் எதிர்ப்புக் கிளம்பியது. இந்தப் படத்தில் நடிகை சாயாசிங், தம்பி ராமையா, நாசர், கருணாகரன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

சிம்பு - ஹன்சிகா
ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. காதல் முறிவுக்குப் பிறகு சிம்பு - ஹன்சிகா இணைந்து நடிக்கும் படம் இது என்பதால் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தில் சிம்புவின் லுக் வெளியிடப்பட்டது. இதில் அவர் விமானியாக நடிக்கிறார். கதையில் மாற்றம் செய்து சிம்பு கேரக்டரை அதிகமாக்கி உள்ளனர்.

கோவா விமானி
இயக்குனர் ஜமீல் கூறும்போது, சிம்புவின் கேரக்டர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. கோவாவைச் சேர்ந்த ஒரு விமானியின் வாழ்க்கைக் கதையை மையப்படுத்தி அவர் கேரக்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது' என்று கூறியிருந்தார். இந்தப் படத்தில் நடிகர் ஶ்ரீகாந்த், விக்ரம் என்ற போலீஸ் கமிஷனர் கேரக்டரில் நடிக்கிறார்.

கொரோனா அச்சுறுத்தல்
மேலும் மஹத், சனம் ஷெட்டி ஆகியோர் இப்போது இந்தப் படத்தில் புதிதாக இணைந்துள்ளனர். இதன் ஷூட்டிங் 17 ஆம் தேதி தொடங்க இருந்தது. வெறும் 7 நாட்கள் ஷூட்டிங் நடந்தால், படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று தயாரிப்பாளர் அன்பழகன் கூறி இருந்தார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் 31 வரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இதன் ஷூட்டிங் தடைபட்டுள்ளது.

சிம்புவிடம் கேட்ட ஹன்சிகா
இதற்கிடையே இந்தப் படத்தில் சிம்புவை நடிக்க அழைத்ததே நடிகை ஹன்சிகாதான் என்று கூறியுள்ளார், இயக்குனர் ஜமீல். அவர் கூறும்போது, கெஸ்ட் ரோலில் நடிப்பதற்கு சிம்புவை அழைக்க முதலில் தயங்கினோம். ஆனால் இது படத்தில் முக்கியமான கேரக்டர். அப்போது நடிகை ஹன்சிகாதான், நான் சிம்புவிடம் பேசுகிறேன் என்றார். அவர் கேட்டதும் சிம்பு மறுக்கவில்லை. உடனடியாக நடிக்க சம்மதித்தார் என்றார்.