Don't Miss!
- News
அணி திரண்ட சிங்குகள்.. பஞ்சாப் பல்கலையில் பிபிசி ஆவணப்படம் திரையிடல்! புரட்சி என ஆம் ஆத்மி பாராட்டு
- Automobiles
2.5 கோடி இதயங்களை வென்ற மாருதி! டாடா, ஹூண்டாய் எல்லாம் பக்கத்துலகூட வர முடியாது
- Finance
Budget 2023: பொருளாதார ஆய்வறிக்கை இன்று தாக்கல்.. கவனிக்க வேண்டியது என்ன?
- Sports
3வது டி20 போட்டியிலும் இப்படியா? அகமதாபாத் பிட்ச்-ல் உள்ள சஸ்பன்ஸ்.. என்ன செய்யப்போகிறார் பாண்ட்யா??
- Technology
பிரபஞ்சத்தின் மறுபக்கத்தில் இருந்து வந்த ரேடியோ சிக்னல்.! திறமையாகக் கண்டுபிடித்த இந்தியர்கள்.!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க பிறக்கும்போதே சமையல் நிபுணராக பிறந்தவர்களாம்...இவங்கள கல்யாணம் பண்றவங்க அதிர்ஷ்டசாலிகளாம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
Hansika Marriage: ஜெய்ப்பூர் அரண்மனையில் நாளை திருமணம்.. கோலாகலமாக நடக்கும் திருமண சடங்குகள்!
ஜெய்ப்பூர்: தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து இந்திய சினிமா ரசிகர்களை கவர்ந்த நடிகை ஹன்சிகா மோத்வானியின் திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள முண்டோட்டா அரண்மனையில் டிசம்பர் 4 (நாளை) பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.
பாலிவுட் நடிகைகளான ஆலியா பட், கத்ரீனா கைஃப் எல்லாருமே எப்படி ராஜஸ்தானில் பிரம்மாண்ட அரண்மனையில் திருமணத்தை நடத்தினார்களோ அதே போல தனது திருமணத்தை ஹன்சிகா நடத்த ஆயத்தமாகி விட்டார்.
இந்நிலையில், நேற்று இரவு ஹன்சிகா மற்றும் சோஹேல் கத்தூரியாவுக்கு நடைபெற்ற சுஃபி எனும் திருமணத்திற்கு முந்தைய சடங்கு வீடியோ சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.
வருங்கால
கணவருடன்
பூஜையில்
பங்கேற்ற
ஹன்சிகா..
முழு
வீச்சில்
தயாராகும்
திருமண
ஏற்பாடுகள்!

குட்டி குஷ்பு
குட்டி குஷ்பு என்றே கோலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பப்ளி கேர்ள் ஹன்சிகா மோத்வானிக்கு நாளை கோலாகலமாக ராயல் திருமணம் ராஜஸ்தானில் நடைபெற உள்ளது. நடிகர் தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமான ஹன்சிகா, உதயநிதியுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி, ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல், விஜய்யுடன் வேலாயுதம் மற்றும் புலி, சூர்யாவுடன் சிங்கம் 2, சிம்புவுடன் வாலு மற்றும் இந்த ஆண்டு வெளியான மஹா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சிம்புவுடன் காதல்
சிம்புவை காதலித்து வந்த நடிகை நயன்தாரா லவ் பிரேக்கப் செய்த பின்னர், வாலு படத்தில் ஜோடியாக இணைந்த நடிகை ஹன்சிகா சிம்புவை காதலிக்கத் தொடங்கினார். ஆனால், சிம்பு - ஹன்சிகா காதலும் நீடித்து நிலைக்காமல் சில மாதங்களிலேயே இருவரும் பிரேக்கப் செய்து பிரிந்து விட்டனர்.

தொழிலதிபருடன் திருமணம்
அதன் பின்னர் நடிகை ஹன்சிகாவுக்கு பெரிய படங்கள் தமிழ் சினிமாவில் கிடைக்காமல் இருந்து வந்தது. உடல் எடையை எல்லாம் குறைத்து பார்த்தாலும் 31 வயதிலேயே மார்க்கெட் இழந்த நடிகையாக மாறிவிட்டார். இந்நிலையில், தொழிலதிபர் மற்றும் தனது வெட்டிங் பிளானர் கம்பெனியின் பார்ட்னரான சோஹேல் கத்தூரியாவுடன் டிசம்பர் 4ம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளார். சமீபத்தில் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான ஈஃபிள் கோபுரம் அருகே தனது நிச்சயதார்த்தை நடத்தி வருங்கால கணவரை அறிமுகம் செய்து வைத்தார் ஹன்சிகா.

ஜெய்ப்பூர் அரண்மனையில்
நாளை ஜெய்ப்பூரில் உள்ள முண்டோட்டா அரண்மனையில் நடிகை ஹன்சிகா மற்றும் தொழிலதிபர் சோஹேல் கத்தூரியாவின் திருமணம் கோலாகலமாக நடைபெற உள்ளது. பாலிவுட் திரை பிரபலங்கள் முதல் கோலிவுட்டில் குறிப்பிட்ட சில சினிமா பிரபலங்கள் வரை அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

களைகட்டிய மெஹந்தி
3 நாட்களாக கோலாகலமாக ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமண நிகழ்ச்சிகள் களைகட்டி வருகின்றன. வியாழனன்று நடைபெற்ற மெஹந்தி ஃபங்ஷன் புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தின. மருதாணி சிவந்த கையுடன் ஹன்சிகா அழகாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகின.

சுஃபி சடங்கு
முன்னதாக துர்கா பூஜை நடத்திய மணமக்கள் இருவரும் வெள்ளிக்கிழமை இரவு சுஃபி எனும் திருமணத்திற்கு முந்தைய சடங்கில் கலந்து கொண்டனர். ராயல் உடையில், உடல் முழுக்க நகைகளுடன் நடிகை ஹன்சிகா மோத்வானி நடந்து வரும் வீடியோ காட்சியை மாப்பிள்ளை சோஹேல் கத்தூரியாவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இன்று இரவு சங்கீத் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாம்.

செகண்ட் மேரேஜ்
நடிகை ஹன்சிகா திருமணம் செய்து கொள்ள உள்ள தொழிலதிபர் சோஹேல் கத்தூரியாவுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்னதாகவே திருமணம் நடைபெற்று விட்டது. ஹன்சிகாவின் தோழியை தான் அவர் திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்ட நிலையில், தற்போது ஹன்சிகாவை திருமணம் செய்து கொள்ள உள்ளார் சோஹேல் கத்தூரியா.