»   »  போகனுக்காக சரக்கடித்த ஹன்சிகா!

போகனுக்காக சரக்கடித்த ஹன்சிகா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரபு தேவா தயாரிப்பில் தேவி படத்துக்குப் பிறகு பிரமாண்டமாக வெளியாகும் படம் போகன். ஜெயம் ரவி, ஹன்சிகா, அரவிந்த்சாமி நடித்துள்ள இந்தப் படத்தை, ரோமியோ ஜூலியட் புகழ் லக்ஷ்மன் இயக்கியுள்ளார்.

ஜெயம் ரவி, ஹன்சிகா, லக்ஷ்மன் கூட்டணிக்கு இது இரண்டாவது படம்.


Hansika consumes alcohol for Bogan

இந்தப் படத்தில் நடித்தது குறித்து ஹன்சிகா கூறுகையில், "போன் படத்தில் நடித்தது மறக்க முடியாதது. ஜாலியான அனுபவங்கள் நிறைய. முதல்முறையாக இந்தப் படத்துக்காக குடித்திருக்கிறேன். ரொம்ப நீளமான காட்சி. பத்து நாட்கள் எடுத்தார்கள். என் வாழ்க்கையில் செய்யாத ஒன்றை நான் செய்திருக்கிறேன்.


ஜெயம் ரவியுடன் நடிக்கும் 3-வது படம் இது. எனக்கு ரொம்ப சவுகர்யமான ஹீரோ ஜெயம் ரவி.


சில புதுப் படங்களை ஒப்புக் கொண்டுள்ளேன். ஆனால் அதுகுறித்து என் தயாரிப்பாளர் சொல்லவேண்டும் என்று விரும்புகிறேன்.


இந்திப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் தமிழ், தெலுங்கில் நடிப்பதையே விரும்புகிறேன். இங்குதான் எனக்கு ரொம்ப வசதியாகவும் உள்ளது," என்கிறார்.


தமிழகம் மற்றும் உலகெங்கும் நாளை வெளியாகிறது போகன்.

English summary
Actress Hansika has shared her experience in Bogan movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil