»   »  தொடரும் ஹன்சிகாவின் தாராள மனசு... விவேக் பாராட்டு!

தொடரும் ஹன்சிகாவின் தாராள மனசு... விவேக் பாராட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நல்ல விஷயங்களுக்காக பொருளுதவி அல்லது வேறு எந்த வகையிலான உதவிகள் என்றாலும் முதலில் நிற்கிறார் ஹன்சிகா.

ஏற்கெனவே 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார் அவர். ஒவ்வொரு பிறந்த நாளிலும் முடிந்தவரை இப்படிப்பட்ட தத்தெடுப்புகளைத் தொடரவும் முடிவு செய்துள்ளார்.

நாடு முழுவதும்

நாடு முழுவதும்

ஒரு குறிப்பிட்ட ஏரியா அல்லது மாநிலம் என தனது சேவையைச் சுருக்கிக் கொள்ளாமல், நாடு முழுவதும் இப்படிப்பட்ட குழந்தைகளைத் தேடிப் பிடித்து தத்தெடுக்க முடிவு செய்துள்ளார்.

நிவாரண நிதி

நிவாரண நிதி

அடுத்து நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினால் வாடும் மக்களின் துயரைத் துடைக்க தன்னாலான உதவித் தொகையாக ரூ 6 லட்சத்தை நிவாரண நிதியாக அளித்துள்ளார்.

விவேக் பாராட்டு

விவேக் பாராட்டு

ஹன்சிகாவின் இந்த நல்ல மனசைப் பாராட்டியுள்ள நடிகர் விவேக், "ஹன்சிகா ஒரு மிகச் சிறந்த மனிதாபிமானி. அவருக்கு என் பாராட்டுக்கள்' என்று ட்வீட் செய்துள்ளார்.

அடுத்தடுத்து படங்கள்

அடுத்தடுத்து படங்கள்

இந்த நல்ல மனசுக்கார ஹன்சிகாவுக்கு அவரது மனசைப் போலவே படங்களும் தாராளமாகக் குவிகின்றன. விஜய்யுடன் புலியை முடித்துவிட்ட அவர், அடுத்து உதயநிதியுடன் இதயம் முரளி, சுந்தர் சியின் அரண்மனை போன்ற புதிய படங்களில் நடிக்கிறார். ஏற்கெனவே வரவேண்டிய படங்கள் இரண்டு உள்ளன.

English summary
Hansika, known for her philanthropic activities is helping poor children across the country. The actress adopted many needy kids and providing them proper accommodation and education. Now Hansika is said to have donated RS 6 lakhs to the victims of Nepal earthquake and wishes are pouring in for the actress' generosity.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil