»   »  நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்.... சாப்பாடு ஸ்பான்சர் ஹன்சிகா... 2000 உணவு வழங்கினார்!

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்.... சாப்பாடு ஸ்பான்சர் ஹன்சிகா... 2000 உணவு வழங்கினார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று நடைபெற்ற நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், சுமார் 2௦௦௦ நடிகர்களுக்கான உணவு செலவினை ஹன்சிகா ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

நடிகர் சங்கத்தின் 62 வது பொதுக்குழு நடிகர் சங்கத்தலைவர் நாசர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில் 1500 க்கும் மேற்பட்ட நடிக, நடிகையர் கலந்து கொண்டனர்.

முதல் பொதுக்குழு

முதல் பொதுக்குழு

நாசர் தலைமையிலான புதிய நிர்வாகிகள் நடிகர் சங்கத்தில் பதவியேற்ற பின் நடக்கும் முதல் பொதுக்குழு என்பதால், இந்தக் கூட்டத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. நேற்று மதியம் 2.15 மணியளவில் 1500க்கும் மேற்பட்ட நடிக, நடிகையருடன் சென்னை லயோலா கல்லூரியில் இந்தப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

நடிகர் சங்கக் கட்டிடம்

நடிகர் சங்கக் கட்டிடம்

இந்தக் கூட்டத்தில் நடிகர் சங்கத்திற்கான இணையதளம் தொடங்கப்பட்டது. மேலும் 26 கோடி செலவில் விரைவில் உருவாகவிருக்கும் நடிகர் சங்கத்தின் மாதிரிக் கட்டிடமும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. ஏதாவது எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறலாம் என்று அனைவரது மனத்திலும் ஒரு அச்சம் இருந்தது. ஆனால் அதுபோன்ற எந்த நிகழ்வுகளும் நடைபெறாமல் இந்தக் கூட்டம் சுமூகமாக நடைபெற்று முடிந்தது.

படப்பிடிப்பு ரத்து

படப்பிடிப்பு ரத்து

இந்தக் கூட்டத்தில் நடிக, நடிகையர் கலந்து கொள்வதற்கு வசதியாக நேற்று நடைபெறவிருந்த அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன. அப்படியிருந்தும் ஒருசில நடிக, நடிகையர் வெளியூர் படப்பிடிப்புகளில் இருந்ததால் இதில் பங்குபெறவில்லை. மேலும் வெளியூர் படப்பிடிப்புகளில் இருந்தவர்களுக்கு நடிகர் சங்கத்தின் சார்பில் விலக்கு அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஹன்சிகா

ஹன்சிகா

நடிகை ஹன்சிகா இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் பொதுக்குழுவில் கலந்து கொள்ளாவிடினும் அதில் கலந்து கொண்ட 2௦௦௦ நடிகர்களுக்கான உணவு செலவினை ஹன்சிகா ஏற்றுக் கொண்டிருக்கிறார். என்னால் பொதுக்குழுவுக்கு வரமுடியாது, எனினும் என்னுடைய பங்களிப்பாக இந்த உணவு செலவினை ஏற்றுக் கொள்கிறேன் என்று ஏற்கனவே ஹன்சிகா கூறியிருந்தாராம்.

கார்த்தி, விஷால்

அதேபோல நேற்று நடைபெற்ற பொதுக்குழுவின் மொத்த உணவு செலவையும் ஹன்சிகா ஏற்றுக்கொள்ள, பதிலுக்கு விஷால், கார்த்தி இருவரும் அவருக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை அனுப்பியிருக்கிறார்கள். தற்போது அந்த வீடியோவைப் பகிர்ந்து ஹன்சிகா தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

English summary
Actor Association 62nd annual general meeting held Yesterday afternoon on the campus of Loyola College in Nungambakkam. This General Meeting Hansika spend money for more than 2000 actors food Expenses.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil