»   »  ஹன்சிகா என்ற பெண்ணோவியம் வரைந்த பொன்னோவியங்கள் ஏலம்.. தனது தத்துக் குழந்தைகளுக்காக!

ஹன்சிகா என்ற பெண்ணோவியம் வரைந்த பொன்னோவியங்கள் ஏலம்.. தனது தத்துக் குழந்தைகளுக்காக!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது தத்துக் குழந்தைகளுக்காக தான் வரைந்த ஓவியங்களை ஏலம் விட முடிவெடுத்துள்ளாராம் நடிகை ஹன்சிகா.

தமிழில் தனுஷ் ஜோடியாக மாப்பிள்ளை படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. குஷ்பு சாயலில் இருந்ததாலும், தனது திறமையான நடிப்பாலும் குறுகிய காலத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்தார்.

தற்போது கை நிறைய படங்களும் தமிழின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ளார் ஹன்சிகா.

ஓவியம்...

ஓவியம்...

திரைப்படங்களில் நடிப்பது ஒரு புறம் இருந்தாலும், பொழுதுபோக்காக தனது ஓய்வு நேரங்களில் ஓவியம் வரைவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் ஹன்சிகா.

சமூகசேவகி...

சமூகசேவகி...

அதேபோல், சிறந்த நடிகையாக மட்டுமின்றி, சமூகசேவை செய்பவராகவும் அடையாளம் காணப்பட்டுள்ளவர் ஹன்சிகா. தன்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஏழை குழந்தைகளை தத்தெடுப்பதை இவர் வழக்கமாக வைத்துள்ளார்.

இல்லம் கட்டும் முயற்சி...

இல்லம் கட்டும் முயற்சி...

இதற்கென பணம் சேர்த்து வைக்கும் முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார். மும்பை பகுதியில் இந்த இல்லம் கட்டுவதற்கென இடம் ஒன்றையும் அவர் வாங்கி வைத்துள்ளார்.

ஓவியங்கள் ஏலம்...

ஓவியங்கள் ஏலம்...

இந்நிலையில், தனது ஓவியங்களை ஏலத்தில் விற்று, அதில் கிடைக்கும் பணத்தை தனது தத்துக் குழந்தைகளின் நலனுக்காக செலவிடத் திட்டமிட்டுள்ளாராம் ஹன்சிகா. இதற்கென ஒரு அறை நிரம்பும் அளவிற்கு சேர்ந்துள்ள ஓவியங்களை விற்க அவர் முடிவு செய்துள்ளார்.

ரூ. 15 லட்சம்...

ரூ. 15 லட்சம்...

ஏற்கனவே, கடந்தாண்டு இதே போல் ஹன்சிகாவின் ஓவியம் ஒன்று ஏலத்தில் விடப்பட்டது. பின்னர் அது ரூ. 15 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Despite the fact that Hansika has backed off on marking star heros’ movies, she is occupied with a modest bunch of Tamil tasks with rising stars in Kollywood. The actress now has the movie Aranmanai prepared for release this 29th. Aside from being appreciated for her charming looks, Hansika is likewise known for her inventive and human side.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil