»   »  உல்டாவா செய்யும் ஹன்சிகா: அவர் என்ன ஆசைப்பட்டா அப்படி செய்றார்?

உல்டாவா செய்யும் ஹன்சிகா: அவர் என்ன ஆசைப்பட்டா அப்படி செய்றார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதர்வாவை அடுத்து மற்றொரு இளம் ஹீரோவுடன் நடிக்கிறார் ஹன்சிகா.

தனுஷின் மாப்பிள்ளை படம் மூலம் கோலிவுட் வந்தார் ஹன்சிகா. தளபதி விஜய், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின், சூர்யா,விஷால், சித்தார்த் உள்ளிட்டோருடன் நடித்துள்ளார்.

தற்போது அவர் மார்க்கெட் நிலவரம் சரியில்லை. பெரிய ஹீரோக்கள் படங்களில் நடித்த அவர் தற்போது வளர்ந்து வரும் ஹீரோக்களின் படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

பிரபுதேவா

பிரபுதேவா

வாய்ப்புகள் இல்லாத நிலையில் பிரபுதேவாவுடன் சேர்ந்து குலேபகாவலி படத்தில் நடித்துள்ளார் ஹன்சிகா. அந்த படம் வரும் 12ம் தேதி ரிலீஸாக உள்ளது.

ஹன்சிகா

ஹன்சிகா

அதர்வா முதன் முதலாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் ஹன்சிகா. இந்நிலையில் அவருக்கு மேலும் ஒரு பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

துப்பாக்கி முனை

துப்பாக்கி முனை

மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்த தினேஷ் செல்வராஜ் இயக்கும் துப்பாக்கி முனை படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக நடிக்கிறார் ஹன்சிகா. இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.

கதை

கதை

இயக்குனர் மும்பைக்கே வந்து என்னை சந்தித்து கதை சொன்னார். கதை மிகவும் பிடித்திருந்ததால் உடனே ஓகே சொல்லிவிட்டேன். இதுவரை நான் நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரம் எனக்கு கிடைத்துள்ளது என்று ஹன்சிகா தெரிவித்துள்ளார்.

English summary
Hansika is the leading lady of Vikram Prabhu's Thuppaki Munai being directed by Dinesh Selvaraj. 2018 has started on a good note for Hansika. Her movie with Prabhu Deva titled Gulebakavali is hitting the screens on january 12th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X