Don't Miss!
- News
இதுதான் ரிஷி சுனக்.. விதியை மீறிய மூத்த அமைச்சர்.. ஒரே அடியாக தூக்கிய ரிஷி சுனக்! அதிரடி நடவடிக்கை
- Automobiles
இன்றைய 2023ஆம் காலக்கட்டத்தில் இந்த அம்சங்கள் இன்றி கார் வாங்குவதே வேஸ்ட்! உங்க கார்களில் என்னென்ன மிஸ் ஆகுது?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
- Technology
பட்ஜெட் விலை Poco எக்ஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி வெளியானது.! ரெடியா இருங்க.!
- Finance
பட்ஜெட்டுக்கு முன்பு தங்கம் விலை சரிவு.. தொடர்ந்து குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?
- Lifestyle
பிப்ரவரி மாதத்தில் இந்த 4 ராசிக்காரங்க நிறைய பணப் பிரச்சனைகளை சந்திப்பாங்களாம்.. உஷாரா இருங்க...
- Travel
இனி திருப்பதி தரிசனம், ரூம் புக்கிங் செய்வது ஈசி – TTD யின் புதிய மொபைல் செயலி!
- Sports
3வது டி20 போட்டியிலும் இப்படியா? அகமதாபாத் பிட்ச்-ல் உள்ள சஸ்பன்ஸ்.. என்ன செய்யப்போகிறார் பாண்ட்யா??
ஹன்சிகாவின் ‘காந்தாரி‘ பர்ஸ்ட் லுக் போஸ்டர்..காஞ்சனா படத்தின் காப்பியா? கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை : நடிகை ஹன்சிகா மோத்வானி நடிப்பில் உருவாகி உள்ள காந்தாரி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் உருவாகி உள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஹன்சிகா மிரட்டலாக இருக்கிறார்.
ஹாரர், த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில், மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், ஆடுகளம் நரேன், பிரிஜிதா, பவன், உள்பட பலர் நடித்துள்ளன.
ஹன்சிகா மோத்வாணி இரண்டு வேடத்தில் நடித்துள்ள இப்படம் பிப்ரவரி 24ந் தேதி வெளியாக உள்ளது.
வசூலில் டல்லடிக்கும் லத்தி, கனெக்ட்... புலம்பும் விஷால், நயன்: இதுவும் தேவையில்லாத ஆணிதானா?

நடிகை ஹன்சிகா மோத்வானி
நடிகை ஹன்சிகா மோத்வானி இந்த மாதம் தொடக்கத்தில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் அரண்மனையில் கோலாகலமாக நடைபெற்றது. நீண்ட நாள் காதலரான சோஹேல் கதுரியாவை ஹன்சிகா திருமணம் செய்து கொண்டார். முதல் நாளில் மெஹந்தி விழா, இரண்டாவது நாளில் இசை நிகழ்ச்சி என இவர்களது திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகும் பல படங்களில்
திருமணத்திற்கு பின்பும் ஹன்சிகா ஏராளமான படங்களில் கமிட்டாகி உள்ளார். பாட்னர், 105 மினிஸ்ட், மை நேம் ஸ் ஸ்ருதி, ரௌடி பேபி போன்ற படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். இதில், நடிகை ஹன்சிகா நடிப்பில் ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்திற்கு 'காந்தாரி'என பெயரிட்டுள்ளனர். ஹன்சிகா இரட்டை வேடத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

காந்தாரி ஃபர்ஸ்ட் லுக்
இப்படத்திற்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் திரைக்கதை எழுதியுள்ளார். இவருடன் மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், பிரிஜிதா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் தரைவிரி கோலத்துடன் ஹன்சிகா இருக்கிறார்.

கிண்டலடிக்கும் ரசிகர்கள்
இணையத்தில் வைரலாகி வரும் இந்த போஸ்டரை பார்த்த நெட்டிசன்ஸ், இந்த போஸ்டரை பார்க்கும் போது காஞ்சனா பட போஸ்டரைப் பார்ப்பது போல இருப்பதாகவும், ஏற்கனவே காஞ்சனா ஒன்று, இரண்டு,மூன்று வெளியாகிவிட்ட இது காஞ்சனா பகுதி நாலா என ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கிண்டலடித்து வருகின்றனர்.