Don't Miss!
- News
இரட்டை இலையை முடக்கிடலாம் என எண்ணுகிறார்கள்..பெரும்பான்மை இருந்தால் நிரூபியுங்க.. ராஜன் செல்லப்பா
- Finance
உலகிலேயே 3வது இடம்.. அசத்தும் இந்திய ஸ்டார்ட்அப் துறை..!
- Sports
இந்திய அணிக்கு அடித்த செம லக்.. மேலும் ஒரு ஆஸி. வீரர் விலகல்.. பின்னடைவை சந்திக்கும் ஆஸ்திரேலியா
- Lifestyle
உங்க காலில் இந்த பிரச்சினை இருந்தால் உங்கள் தைராய்டு சுரப்பியில் சிக்கல் இருக்குனு அர்த்தமாம்... ஜாக்கிரதை!
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Automobiles
ஹீரோ ஸுமால இத்தன மாடலுக்கு பாதிப்பா! டிவிஎஸ் ஜுபிடர், ஹோண்டா ஆக்டிவா, டியோனு எல்லாத்துக்குமே ஆப்புதான்...
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
திருமண நாளில் ஹன்சிகா செய்த நல்ல காரியம்..ஆதரவற்றவர்களுக்கு விருந்து!
ஜெய்பூர்: திருமண நாளில் நடிகை ஹன்சிகா மோத்வானி செய்த நல்ல காரியத்தை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
எங்கேயும் எப்போதும் காதல் படத்தில் கொழுக்கு மொழுக்குனு இருந்த ஹன்சிகாவை பார்த்ததும் மொத்த தமிழ் ரசிகர்களும் அவுட்டாகிவிட்டனர்.
சின்ன குஷ்பூ என பெயர் எடுத்த ஹன்சிகா விஜய், தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். குறுகிய காலத்திலேயே 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
வணங்கான் வந்துட்டு இருக்குன்னு சொன்னாரே பாலா.. அதிரடியாக விலகிய சூர்யா.. என்ன ஆச்சு?

ஹன்சிகா மோத்வானி
ஹன்சிகா மோத்வானி தனது நீண்ட நாள் காதலரான மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சோஹெல் கதுரியாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்காக 450 ஆண்டு பழமையான ஜெய்பூர் அரண்மனை பிரம்மாண்டமாக தயாராகி உள்ளது. திருமண விழா 10 நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

பூரிப்புடன் ஹன்சிகா
தற்போது மெஹந்தி விழாவுடன் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் தொடங்கின. கையில் மருதாணியுடன், ஹன்சிகாவின் முகத்தில் கல்யாண கலை தாண்டவாடியது. சிவந்த கைகளுடன், சிவப்பு நிற உடையில் ஹன்சிகா போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி லைக்குகளை வாரிக் குவித்தன.

மணக்கோலத்தில்
அதன்பின் நடந்த இசை கச்சேரி நிகழ்ச்சியில், மணக்கோலத்தில் நடிகை ஹன்சிகா-சோகைல் கதுரியா நடந்து வரும் வீடியோ இணைய தளத்தில் வைரல் ஆனது. அதில் இஸ்லாமிய முறைப்படி ஹன்சிகா தங்க நிற உடையில் மினுமினுத்தார். மணமகள் உடையில் ஹன்சிகா, சோகைல் கதுரியாவுடன் நடந்து வந்தார். பின்னர் இசைக்கு ஏற்ப உற்சாகத்துடன் ஹன்சிகா நடனமாடினார்.

ஆதரவற்ற குழந்தைகளுக்கு விருந்து
இந்நிலையில், ஹன்சிகா தனது திருமணத்தை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளை தனது திருமணத்திற்கு அழைத்து விருந்து கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையைச் சுற்றி வசிக்கும் குழந்தைகளுக்கு திருமண உணவுகளை, திருமணம் நாளில் அனுப்பவும் ஏற்பாடு செய்துள்ளாராம். அதுமட்டுமில்லாமல் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம், இந்தியா முழுவதும் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு தனது திருமண நாளில் சுவையான உணவை வழங்கி உள்ளார். ஹன்சிகாவின் செயலை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

ஹனிமூனுக்காக
நடிகை ஹன்சிகா திருமணம் முடிந்த கையோடு தனது கணவருடன் தேனிலவுக்காக அலாஸ்கா, கனடா, ஐஸ்லாந்து, கிரீன்லாந்து, நார்வே, ஸ்வீடன் மற்றும் பின்லாந்து உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.ஹனிஸ்காவும் சோஹேலும் இணையத்தில் ரசிகர்கள் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.