twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல..அதள பாதாளத்தில் ஹன்சிகா..சிம்பு காரணமா?

    |

    சென்னை : நடிகை ஹன்சிகா மோத்வானி நடித்த மஹா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் ஹன்சிகா கவலையில் ஆழ்ந்துள்ளார்.

    Recommended Video

    Maha Public Review | Maha Review | Maha Movie Review | Simbu STR Hansika | *Review

    மாலிக் ஸ்டிரீம்ஸ் கார்ப்பரேஷன் சார்பில் வி.மதியழகன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் யு.ஆர்.ஜமீல் இயக்கி உள்ள படம், 'மஹா'. இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார்.

    ஸ்ரீகாந்த், ரேஷ்மா, சனம் ஷெட்டி, மேகா ஸ்ரீகாந்த், நந்திதா ஜெனிபர், தம்பி ராமையா, மகத், கருணாகரன், சுஜித் சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வெள்ளிக்கிழமை வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

    ராரா ராக்கம்மா பாட்டுக்கு செம குத்தாட்டம் போட்ட ரேஷ்மா.. ஹார்ட்டின்களை தெறிக்க விடும் ரசிகர்கள்!ராரா ராக்கம்மா பாட்டுக்கு செம குத்தாட்டம் போட்ட ரேஷ்மா.. ஹார்ட்டின்களை தெறிக்க விடும் ரசிகர்கள்!

    50வது படம்

    50வது படம்

    'மஹா' படம், ஹன்சிகா மோத்வானியின் 50வது படமாகும். இந்தப் படம் வெளியாவதற்கு பல சிக்கல்கள் எழுந்தன. இருந்தாலும் தடைகளை கடந்து வெள்ளிக்கிழமை திரையரங்கில் வெளியானது. குழந்தைகளை கடத்திக் கொள்ளும் சைக்கோ கொலையாளி பற்றிய திரில்லர் கதை தான் மஹா திரைப்படத்தின் கதை. இப்படத்தில் ஒரு குழந்தையின் தாயாக தனது அனுபவமிக்க நடிப்பால் ஹன்சிகா கலக்கி இருந்தார்.

    பரபரப்பு காட்சிகள்

    பரபரப்பு காட்சிகள்

    காட்சிக்கு காட்சி பரபரப்பு விறுவிறுப்புக்கும் பஞ்சமே இல்லாமல் கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குநர். இந்த படத்தை பார்க்கும் பெற்றோருக்கு குழந்தைகளை பத்திரமாக பாதுகாப்பது எப்படி? என்பது குறித்த விழிப்புணர்வை இத்திரைப்படம் ஏற்படுத்தி உள்ளது. திரில்லர் கதைகளை விரும்பும் சினிமா ரசிகர்கள் இந்த படத்தை ஆர்வமாக பார்த்தனர்.

    கெஸ்ட்ரோலில் சிம்பு

    கெஸ்ட்ரோலில் சிம்பு

    இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது சிம்பு இந்த படத்தில் நடிக்க மிகுந்த ஆர்வம் காட்டி இருந்ததால், இந்த படத்தில் அவருக்காக ஒரு பாட்டு, ஒரு சண்டை என படத்தில் மொத்தம் 40 நிமிடங்களுக்கு மேல் வருவார் என்று கூறப்பட்டது. அது மட்டும் இல்லாமல் சிம்புவின் அப்பாவின் உடல் நிலை சரியில்லாததால், சிம்பு இந்த இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது.

    சிம்பு தான் காரணம்

    சிம்பு தான் காரணம்

    இதனால், சிம்புவின் ரசிகர்கள் படம் வெளியானதும் முதல் நாள் முதல் ஷோவில் படத்தை பார்த்தனர். படத்தை பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதாவது 40 நிமிடம் வருவார் என்று விளம்பரப்படுத்தப்பட்ட நிலையில்,படம் ஆரம்பிக்கும் போது 10 நிமிடமும், படத்தின் இரண்டாவது பாதியில் 10 நிமிடமும் வந்ததால்,சிம்பு ரசிகர்கள் கடுப்பாகி விட்டனர். இது சிம்பு படம் இல்லை ஹன்சிகா படம், பிறகு ஏன் அப்படி விளம்பர படுத்தினார்கள் என்று கேள்வி கேட்டு வருகின்றனர். இதுவே படத்திற்கு மைனசாக அமைந்துவிட்டது.'

    சொதப்பல்

    சொதப்பல்

    சிம்புவின் மாநாடு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு மிகப்பெரிய மார்க்கெட் இருப்பதால், அவரது பெயரை சொல்லி படத்தை எப்படியாவது ஓட்டிவிடலாம் என படக்குழு போட்ட பிளான் சொதப்பலாகி விட்டது. ஏற்கனவே ஹன்சிகாவுக்கு தமிழில் படங்கள் இல்லாதால் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தார் ஆனால், இந்த படம் இப்படி ஆகும் என்ற அவர் நினைத்திருக்க மாட்டார்.

    English summary
    Hansika Motwani's 50th movie Maha. The movie is a crime thriller around the topic of child abuse.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X