»   »  ஸ்ருதி ஹாஸனுக்கு பதில் சுந்தர் சியின் 'ஃபேவரிட் நடிகை' ஹன்சிகா!

ஸ்ருதி ஹாஸனுக்கு பதில் சுந்தர் சியின் 'ஃபேவரிட் நடிகை' ஹன்சிகா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரூ 250 கோடியில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் சங்கமித்ரா படம் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. ஆனால் தினமும் படத்தின் யாராவது ஒரு நடிகர் அல்லது நடிகை மாறிக் கொண்டே இருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் முதலில் அஜித் ஹீரோவாக நடிப்பார் என்றார்கள். ஆனால் இந்த பிரமாண்ட சிக்கலில் அவர் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை.

Hansika replaces Shruthi Hassan in Sangamithra

அடுத்து விஜய் நடிப்பார் என்றார்கள். ஏனோ அவரும் நடிக்கவில்லை. அப்புறம்தான் ஜெயம் ரவி, ஆர்யா ஒப்பந்தமானார்கள்.

நாயகியா ஸ்ருதி ஹாஸனை ஒப்பந்தம் செய்து, கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு மேல் அவருக்கு வாள் பயிற்சி எல்லாம் கொடுத்தார்கள். ஆனால் முழு ஸ்க்ரிப்டையும் தரவில்லை என்று குற்றம்சாட்டி விலகிக் கொண்டார் ஸ்ருதி. இப்போது அவரது வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் சுந்தர் சியின் ஆஸ்தான நடிகைகளுள் ஒருவரான ஹன்சிகா.

ஹன்சிகாவை இளவரசியாக்குவதற்கான வேலைகள் மும்முரமாக நடக்கின்றன.

English summary
Sangamithra team has booked Hansika for the role of princes
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil