Don't Miss!
- Lifestyle
பட்ஜெட் 2023: இந்த ஆண்டு சிவப்பு நிற கைத்தறி புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- Finance
budget 2023: தொடரும் நம்பிக்கை..சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்..!
- News
எங்கள் தரப்பில் வேட்பாளர் தயார்.. பாஜக நிலைப்பாட்டுக்கு காத்திருக்கிறோம்..ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி!
- Technology
BSNL சூப்பர் ரீசார்ஜ்: மாதம் ரூ.184 தான் செலவு 395 நாளுக்கு வேலிடிட்டி.! மாஸ் ஆன பிளான் இதான்.!
- Automobiles
ஃப்ரீனாலும் இந்த 5 ரயில்கள்ல மட்டும் போயிடாதீங்க... போனவங்க எல்லாம் கழுவி கழுவி ஊத்துறாங்க!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பெற்றோர் பார்க்க வேண்டிய படம்..ஹன்சிகா நடித்த ‘மஹா‘..மக்கள் விமர்சனம் இதோ!
சென்னை : யு.ஆர்.ஜமீல் இயக்கி உள்ள படம், 'மஹா' திரைப்படத்தில் ஹன்சிகா மோத்வானி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அவருடன் இணைந்து ஸ்ரீகாந்த், ரேஷ்மா, சனம் ஷெட்டி, மேகா ஸ்ரீகாந்த், நந்திதா ஜெனிபர், தம்பி ராமையா, மகத், கருணாகரன், சுஜித் சங்கர் ஆகியோரும் நடித்துள்ளனர்.
படத்திற்கு சுவாரஸ்யம் கூட்டும் விதமாக நீட்டிக்கப்பட்ட சிறப்பு தோற்றத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளார். மஹா படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

50வது படம்
'மஹா' படம், ஹன்சிகா மோத்வானியின் 50வது படமாகும். இந்தப் படம் வெளியாவதற்கு பல சிக்கல்கள் எழுந்தன. இருந்தாலும் தடைகளை கடந்து இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது. குழந்தைகளை கடத்திக் கொள்ளும் சைக்கோ கொலையாளி பற்றிய திரில்லர் கதை தான் மஹா. இப்படத்தில் ஒரு குழந்தையின் தாயாக தனது அனுபவமிக்க நடிப்பால் ஹன்சிகா கலக்கி இருக்கிறார்.

காட்சிக்கு காட்சி பரபரப்பு
பல ஆண்டுகளுக்கு முன்பே அப்படத்தின் படப்பிடிப்பு பணியில் முடிந்து பல்வேறு பிரச்சினைகளால் படம் வெளியாகாமல் இருந்தது. காட்சிக்கு காட்சி பரபரப்பு விறுவிறுப்புக்கும் பஞ்சமே இல்லாமல் கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குநர். இந்த படத்தை பார்க்கும் பெற்றோருக்கு குழந்தைகளை பத்திரமாக பாதுகாப்பது எப்படி? என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படும். திரில்லர் கதைகளை விரும்பும் சினிமா ரசிகர்களுக்கு இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.

செம ரொமான்ஸ்
இப்படத்தின் மீது சிம்பு காட்டிய ஆர்வத்தால், சிம்புக்காக ஒரு சண்டை காட்சியும், ஒரு பாடல் காட்சியும் வைக்கப்பட்டது. ஹன்சிகா மற்றும் சிம்பு வரும் காட்சிகள், அவர்களின் ரொமான்ஸ் படத்திற்கு பிளஸ்ஸாக அமைந்துள்ளது. கொலையாளி வரும் காட்சிகளில் தெறிக்க விடப்படும் பின்னணி இசையில் ஜிப்ரான் மிரட்டி இருந்தார். மஹா படத்துக்கு இசை மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

மக்கள் கருத்து
இன்றைய காலகட்டத்தில் தேவையான படம் என்றும், குழந்தைகளை பெற்றோர்கள் எவ்வாறு கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்து படத்தில் உள்ளது. குடும்பத்தோடு அனைத்து பெற்றோர்களும் பார்க்க வேண்டிய படம் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.