»   »  ஹன்சிகா மீது மேனேஜர் பரபரப்பு புகார்!

ஹன்சிகா மீது மேனேஜர் பரபரப்பு புகார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
எப்படி இருந்த ஹன்சிகா இப்படி ஆயிட்டாங்களே!- வீடியோ

சென்னை : நடிகை ஹன்சிகா தனக்கு சம்பளம் தரவில்லை என தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார் ஹன்சிகாவிடம் மேனேஜராக பணியாற்றிய முனுசாமி. தற்போது ஹன்சிகாவின் அம்மாவே அவரது கால்ஷீட், சம்பளம் ஆகியவற்றை கவனித்துக் கொள்கிறார்.

சிம்ரன், மாளவிகா உள்பட சில தமிழ் நடிகைகளுக்கு மேனேஜராக இருந்தவர் முனுசாமி. ஹன்சிகாவுக்கும் இவர்தான் மேனேஜராக இருந்தார். இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தில் ஹன்சிகா மீது புகார் கொடுத்து பரபரப்பைக் கிளப்பியுள்ளார் முனுசாமி.

Hansika's manager complaints against hansika

"இதுவரை பணியாற்றிய படங்களுக்காக ஹன்சிகா எனக்கு சம்பளம் தரவில்லை. எனவே, அதை வாங்கித்தரும்படி கேட்டுக் கொள்கிறேன்" என அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த ஹன்சிகா, 'எங்கேயும் காதல்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்தவருக்கு, தற்போது பெரிதாக வாய்ப்புகள் எதுவும் இல்லை. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'குலேபகாவலி'. தற்போது விக்ரம்பிரபு ஜோடியாக 'துப்பாக்கி முனை' படத்திலும், அதர்வா ஜோடியாக பெயரிடப்படாத படம் ஒன்றிலும் நடித்து வருகிறார் ஹன்சிகா.

தான் குண்டாக இருப்பதாலேயே வாய்ப்புகள் தொடர்ந்து வரவில்லை என நினைத்து தற்போது மிகவும் ஒல்லியாக மாறியிருக்கிறார் ஹன்சிகா. வேலை பார்த்த மேனேஜருக்கு சம்பளத்தை சரியாகக் கொடுப்பது இல்லையா?

English summary
Hansika's manager Munusamy complained against hansika in the South Indian actors association. "Hansika has not paid me for the films I have worked" Mususamy's complaint said.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil