»   »  தூதுவிட்டது வீண்போகவில்லை: மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்த ஹன்சிகா

தூதுவிட்டது வீண்போகவில்லை: மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்த ஹன்சிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹன்சிகா சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறாராம்.

கோலிவுட்டின் பிசியான நடிகையாக இருந்தவர் ஹன்சிகா. தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் உள்ளார். அவர் ஜெயம் ரவியுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள போகன் படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

Hansika to team up again with Sivakarthikeyan

ஹன்சிகா உச்சத்தில் இருந்தபோது வளர்ந்து வந்த ஹீரோவான சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க சம்மதித்தார். இதையடுத்து அவர்கள் சேர்ந்து மான் கராத்தே படத்தில் நடித்தனர்.

தற்போது சிவகார்த்திகேயன் முன்னணி ஹீரோவாகிவிட்டார். ஹன்சிகாவுக்கு தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் உள்ளது. இந்நிலையில் அவர் சிவகார்த்திகேயனுக்கு தூதுவிட்டதாக கூறப்பட்டது.

சிவகார்த்திகேயன் இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமாரின் படத்தில் நடிக்கிறார். அந்த படத்தில் ஹன்சிகாவை ஹீரோயினாக போடுமாறு கூறியுள்ளார் சிவா. சிவாவின் ரெக்கமென்டேஷனால் அவரின் படத்தில் ஹீரோயின் ஆகியுள்ளாராம் ஹன்சிகா.

English summary
Hansika has become Sivakarthikeyan's heroine again in his upcoming movie with Indru Netru Naalai director Ravi Kumar.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil