Just In
- 16 min ago
சனம் ஷெட்டியின் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. அவங்களே சொல்லியிருக்காங்க.. என்னன்னு பாருங்க!
- 38 min ago
'கே.ஜி.எஃப்' இயக்குனரின் 'சலார்' படத்தில் .. பிரபாஸூக்கு வில்லன் ஆகிறார், நடிகர் விஜய் சேதுபதி?
- 46 min ago
ஹிப்ஹாப் ஆதியின் "அன்பறிவு" படப்பிடிப்பு ஆரம்பம்!
- 1 hr ago
பிரம்மாண்ட அரங்கில் தொடங்கியது ‘கலியுகம்’ படப்பிடிப்பு.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
Don't Miss!
- News
கமலா மேடம்.. உங்களுக்காக சூடான புளியோதரை.. தெறிக்க விட்ட பத்மலட்சுமி!
- Sports
உண்மையிலேயே பெரிய வெற்றியாளர்... மலிங்காவை ரொம்ப மிஸ் செய்வோம்... ரோகித் சர்மா நெகிழ்ச்சி
- Automobiles
சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலை உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!
- Finance
தூள் கிளப்பிய பஜாஜ் ஆட்டோ.. லாபம் 23% அதிகரிப்பு.. செம ஏற்றத்தில் பங்கு விலை..!
- Lifestyle
ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை ஏன் தவிா்க்க வேண்டும் என்பதற்கான காரணங்கள்!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அறிமுகம் கொடுத்த அமராவதி.. திரும்பிப் பார்க்க வைத்த தீனா.. அஜீத்தின் "தல" புராணம்!
சென்னை: 'அமராவதி' படத்தின் மூலம் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அஜீத். 'அமராவதி' தொடங்கி 'வேதாளம்' வரை சுமார் 56 படங்கள் இவர் நடிப்பில் வெளியாகியுள்ளன.
1993-2016 வரையிலான 23 வருடங்களில் எத்தனையோ ஏற்றத்தாழ்வுகளை அஜீத் சந்தித்து விட்டார். ஆனால் சினிமாவில் இவருக்கான புகழ் நாளுக்குநாள் அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடில்லை.
ரசிகர் மன்றத்தைக் கலைத்தாலும் கூட இவரது படங்கள் வசூலில் எந்தக்குறையும் வைப்பதில்லை. அதனால் தான் தமிழ் சினிமாவின் 'கிங் ஆப் ஓபனிங்' என்ற செல்லப்பெயரும் இவருக்கு உண்டு.
அஜீத்தின் 45 வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். இந்த நேரத்தில் அவரின் நடிப்பில் வெளியான சிறந்த 5 படங்களை இங்கே காணலாம்.

தீனா
இன்று தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டர் இயக்குனராகத் திகழும் ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தின் மூலம் தான் இயக்குநராக அறிமுகமானார். தற்போது அஜீத்குமார் என்ற உண்மையான பெயரை அஜித்தே மறக்கும் அளவுக்கு 'தல' என்று அவரது ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அந்தத் 'தல' என்ற வார்த்தைக்கு பிள்ளையார் சுழி போட்டது 'தீனா'தான் என்பதால் அஜீத் ரசிகர்கள் பலருக்கும் இந்தப்படம் நிச்சயம் பேவரைட்தான்.

அமர்க்களம்
'உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு' என நிஜத்திலும் அஜீத்திடம், ஷாலினி உருகக் காரணமாக அமைந்த படம் 'அமர்க்களம்'. அஜீத்தின் 25 வது படமாக சரண் இயக்கத்தில் வெளியான 'அமர்க்களம்' சூப்பர்ஹிட்டடித்தது. இந்தப்படம் மூலமாக மலர்ந்த அஜீத்-ஷாலினி காதல் திருமணத்தில் முடிந்து இன்று அனௌஷ்கா, ஆத்விக் என 2 குழந்தைகளுக்கு இவர்களின் அழகான காதல் வாழ்க்கைக்கு அடையாளமாக திகழ்கின்றனர்.

வரலாறு
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 2006 ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் 'வரலாறு'. சிவசங்கர், விஷ்ணு, ஜீவா என 3 கெட்டப்புகளில் வித்தியாசம் காட்டி வில்லத்தனத்திலும் அஜீத் அசத்தியிருப்பார். முதன்முறையாக அஜீத் 3 வேடங்களில் நடித்த 'வரலாறு' இன்றளவும் அஜீத் ரசிகர்களின் பேவரைட் படமாகத் திகழ்கிறது.

பில்லா
ரஜினி படத்தலைப்பு+ ரீமேக் என இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டியது அஜீத் மட்டுமே. இன்றளவும் இந்த சாதனையை யாரும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மிக மிக ஸ்டைலிஷான அஜீத், நயன்தாரா நடிப்பு, ரகுமான் வில்லத்தனம் என ரசிகர்களை மிகவும் ரசிக்கவைத்த படமிது. 100 நாட்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய இப்படம் 2007ம் ஆண்டின் பிளாக்பஸ்டர் ஹிட் என அறிவிக்கப்பட்டது.

என்னை அறிந்தால்
சத்யதேவ் ஐபிஎஸ் என்ற கதாபாத்திரத்தில் ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாக இப்படத்தில் அஜீத் நடித்திருப்பார். முதிர்ச்சியான தோற்றத்தில் அஜீத் நடித்த இப்படம் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. மேலும் திரிஷா, அருண் விஜய் ஆகியோருக்கும் சொல்லிக்கொள்ளும் படமாக அமைந்தது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற 'அதாரு அதாரு' பாடலின் ஒவ்வொரு வரியையும் இன்றளவும் அஜீத் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.