Don't Miss!
- Finance
மத்திய பட்ஜெட் 2023: நிறையத் தண்ணீர் குடிங்க.. பட்ஜெட் போர் அடிக்கலாம்..!
- News
இந்தியாவின் 'கனவு பட்ஜெட்' என அழைக்கப்பட்ட 1997-ம் ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்..ஏன் தெரியுமா?
- Technology
BSNL சூப்பர் ரீசார்ஜ்: மாதம் ரூ.184 தான் செலவு 395 நாளுக்கு வேலிடிட்டி.! மாஸ் ஆன பிளான் இதான்.!
- Automobiles
ஃப்ரீனாலும் இந்த 5 ரயில்கள்ல மட்டும் போயிடாதீங்க... போனவங்க எல்லாம் கழுவி கழுவி ஊத்துறாங்க!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
“அப்பு“ என் சிந்தனையே முடங்கி உள்ளது… புனித் ராஜ்குமாரை நினைத்து உருகிய பிரபலங்கள் !
பெங்களுர் : அப்பு என்று செல்லமாக அழைக்கப்படும் புனித் ராஜ்குமாரின் பிறந்த நாளான இன்று பல திரைப்பிரபலங்கள் அவரை நினைவு கூர்த்து வருகின்றனர்.
கன்னட சூப்பர் ஸ்டார் கடந்த ஆண்டு அக்டோபர் 29ந் தேதி ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
அவருக்கு அஸ்வினி என்ற மனைவியும், த்ரிதி மற்றும் வந்திதா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.
ஹே
ராம்
படத்தில்
ரஜினி
பட
வில்லன்
நடித்த
காட்சிகள்
நீக்கம்!

என் சிந்தனையே முடங்கி உள்ளது
இவரின் பிறந்த நாளான இன்று, பல பிரபலங்கள் அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர். நடிகர் சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், அப்புக்கு பிறந்தநாள் மற்றும் ஜேம்ஸ் திரைப்படம் வெளியாகிறது. வார்த்தைகளே இல்லை, என் மனம் சிந்தனையில் முடங்கியுள்ளது, அவர் சொர்க்கத்தில் இருப்பார். படத்தின் ரிலீசை நினைத்து மகிழ்ச்சியடைவதா அல்லது வருத்தப்படுவதா என்று மனம் குழப்பத்தில் உள்ளது என்று கூறியுள்ளார்.

எப்போதும் என் இதயத்தில்
புனித்தின் கடைசி படமான ஜேம்ஸ் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த பிரியா ஆனந்த், அவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, இனி என் பக்கத்தில் இல்லை...எப்போதும் என் இதயத்தில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் மை டியர்ஸ்ட் அப்பு. என பதிவிட்டுள்ளார்.

மிகவும் நேசிக்கிறேன்
சார்ப்பட்ட பரம்பரை படத்தில் வில்லனாக நடித்த ஜான்கோக்கன், புனித் ராஜ்குமாரை நினைவு கூர்ந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் கர்நாடக ரத்னா, புனித் சார் உங்களை மிகவும் நேசிக்கிறேன். என் இதயத்தில் நீங்கள் என்றென்றும் வாழ்வீர்கள், ஏனென்றால் நீங்கள் எனக்கு சில சிறந்த வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக் கொடுத்தீர்கள் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

ஜேம்ஸ் கடைசி படம்
மறைந்த கன்னட நட்சத்திரம் புனித் ராஜ்குமாரின் கடைசிப் படமான ஜேம்ஸ் அவரது முதல் பிறந்தநாளான இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. இத்திரைப்படம் சர்வதேச அளவில் 4000 திரையரங்குகளில் இன்று வெளியாகி உள்ளது. புனீத்தின் கடைசி படம் திரையில் வெளியாகி உள்ளதால், அவரின் ரசிகர்கள் இந்தப் படத்தை காண மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
Recommended Video

சீக்ரெட் ஏஜெண்டாக
ஜோம் திரைப்படத்தில் படத்தில் புனீத் சீக்ரெட் ஏஜெண்டாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். இவர் புனித்துடன் இணையும் இரண்டாவது படம் இதுவாகும். மேலும் சரத்குமார், ஆதித்யா மேனன் ஆகியோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை புனித்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.