»   »  பகிர்தலில் உள்ள சந்தோஷம் எதிலும் இல்லை! - இது ஹன்சிகா பர்த்டே மெசேஜ்

பகிர்தலில் உள்ள சந்தோஷம் எதிலும் இல்லை! - இது ஹன்சிகா பர்த்டே மெசேஜ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்று 'டார்லிங்' ஹன்சிகா தனது பிறந்த நாளை தான் தத்தெடுத்து வளர்க்கும் குழந்தைகளுடன் கொண்டாடுகிறார்.

ஹன்சிகா மோத்வானிக்கு இன்று தனது பிறந்தநாள். இதனை நண்பர்களுக்கு பார்ட்டி வைத்து பிரமாண்டமாகக் கொண்டாட விரும்பாத அவர் தன் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் எளிமையாகக் கொண்டாடுகிறார்.

Happy birthday Hansika

காலையில் தன் தாயார் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றார். பிறகு தான் தத்தெடுத்து வளர்க்கும் ஆதரவற்ற குழந்தைகளோடு தனது பிறந்தநாள் பரிசுகளையும் கேக்குகளையும் பகிர்ந்து கொண்டார்.

Happy birthday Hansika

"பகிருதலில் இருக்கும் சந்தோஷம் எதிலும் இல்லை. சின்ன வயதிலிருந்தே பகிரும் எண்ணத்தையும் பழக்கத்தையும் எனது தாயார் எனது மனதில் பதித்தார். எனக்கு கிடைத்துள்ள பரிகளையும் கேக்குகளையும் இந்த குழந்தைகளுடன் பகிர்வதில் எனக்கு கிடைக்கும் அளவற்ற சந்தோஷம் எனது பிறந்த நாளை மேலும் சிறப்பிக்கும். 'சந்தோஷமாய் இருப்பது, எளியோர்க்கு உதவுவது மற்றும் ஒழுக்கம் கடைபிடிப்பது என்ற எனது வாழ்க்கை தீர்மானத்தை இந்த வருடமும் பிறந்தநாள் தீர்மானமாக பின்பற்றவுள்ளேன்,'' என்கிறார் புன்னகையுடன் ஹன்சிகா.

Happy birthday Hansika
English summary
Actress Hansika is celebrating her birthday with her adopted children.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil